சென்னை அடுத்த பட்டபிராமில் புதியதாக திறக்கப்பட்ட டாஸ்மாக் கடையை நிரந்தரமாக மூட வழியுறுத்தி தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் அமைப்பினர் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டார்கள். அவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
பட்டாபிராம்; செப், 05- சென்னை ஆவடி அடுத்த பட்டாபிராம் காவல் நிலைய சரகத்திற்கு உட்பட்ட மாநில நெடுஞ்சாலை அருகே சார்லஸ் நகரில் புதிய டாஸ்மாக் கடை திறக்கப்பட்டுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு சுதேசி பெண்கள் பாதுகாப்பு சங்கத்தின் நிறுவன தலைவர் கலைச்செல்வி தலைமையில் முற்றுகை போராட்டம் நடைப்பெற்றது.
இந்த டாஸ் மாக் கடை அமைந்துள்ள இடம் அருகே பள்ளிகள், கோவில்கள், மருத்துவமனை என பொதுமக்கள் மற்றும் பள்ளிக்குழந்தைகள், நோய்வாய் பட்டவர்கள் என பலதரப்பு மக்கள் நடமாடும் பகுதியாகும். இதனால் அவர்களுக்கு பல வழிகளில் பாதிப்புகளும், பாதுகாப்புயில்லாமையும் ஏற்பட கூடும் என்பதால் தமிழக அரசு அதிகாரிகள் உடனடியாக இதில் கவனம் செலுத்தி டாஸ்மாக் கடையை நிரந்திரமாக அப்பகுதியிலிருந்து அப்புறப் படுத்த வேண்டும் என்று அப்போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் முழக்கம் இட்டு 200 கும் மேற்பட்ட பெண்கள் சாலையில் அமர்ந்து போராட முயன்றார்கள். அவர்களை பட்டாபிராம் உதவி ஆணையர் வெங்கடேசன் மற்றும் பட்டாபிராம் காவல் நிலைய தலைமை ஆய்வாளர் விஜயலட்சுமி காவல்துறை அவர்களிடம் பேச்சு வார்த்தையில் ஈடுப்பட்டு போராட்டத்தை கைவிட வழியுறுத்தினார்கள். போராட்டத்தை கைவிட மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட 20 பேருக்கும் மேலானவர்களை அருகிலுள்ள தனியார் திருமண மண்டபத்திற்கு அழைத்துச் செல்லப் பட்டனர். இந்த போராட்டத்தில் சட்ட ஆலோசகர் கவிதா காந்தி ஆவடி நகர தலைவி சௌந்தர்யா மற்றும் பட்டாபிராம் பகுதி வியாபார சங்க செயலாளர் சுரேஷ் துணைத் தலைவர் சந்திரசேகர் மற்றும் வழக்கறிஞர் சுகுமார் மற்றும் அப்பகுதி சுற்று வட்டார பொதுமக்களும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.
ஆவடி ராஜன் செய்தியாளர்