திருத்தணியில் டாக்டர் ராதாகிருஷ்ணன் பயின்ற அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் வெகு சிறப்பாக அன்னாரின் பிறந்த நாள் கொண்டாட்டம் நடைப்பெற்றது.
திருத்தணி; செப்டம்பர், 05- திருத்தணி அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளியில் முன்னால் ஜனாதிபதியும் ஆசிரியருமான மறைந்த டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த தினத்தை அவர் ஆரம்ப காலத்தில் கல்வி பயின்ற பள்ளியில் ஆசிரியர்கள் மாணக்கர்கள் அனைவரும் ஒன்றிணைந்து டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் முகமூடியை அணிந்து வித்தியாசமான முறையில் ஆசிரியர் தினத்தை கொண்டாடி மகிழ்ந்தனர்.
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை ஒவ்வொரு வருடமும், செப்டம்பர் 5 ஆம் தேதி ஆசிரியர் தினம் அரசால் கொண்டாடப்படுவது மட்டுமின்றி இந்தியா முழுவதும் ஆசிரியர்கள், மாணாக்கர்கள் என அனைவராலும் கொண்டாடப்பட்டு வருகிறது. திருத்தணி அருகே உள்ள சர்வப்பள்ளி வெங்கடாபுரம் டாக்டர் ராதாகிருஷ்ணன் தனது பால்ய பருவத்தில் கல்வி பயின்ற திருத்தணி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் ஆசிரியர் தினம் அனுசரிக்கப்பட்டது. ஒழுக்கம், பண்பு, ஆற்றல், ஊக்கம், தன்னம்பிக்கை, விடாமுயற்சி, வாழ்வியல் முறை, பொது அறிவு என அனைத்தையும் மாணாக்கர் களுக்கு சிறந்த முறையில் கற்பித்து, ஒரு உண்மையான வழி காட்டியாக விளங்குபவர்கள் ஆசிரியர்கள். அப்படி பட்ட ஆசிரியர்களுக்கு நன்றி செலுத்தும் வகையில், செப்டம்பர் 5 ஆம் தேதியன்று, ஆசிரியர் தினமாக’ முன்னாள் குடியரசு தலைவர் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த தினத்தை கொண்டாடுகிறோம்.
தன் வாழ்நாளில் கல்விக்காக தன்னையும் தனது உடமைகளையும் மாணக்கர்களுக்காக அர்பணித்த ஆசிரியர்தான் திருத்தணியில் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த வீட்டை நூலகமாகவும் கருணை இல்லமாக மாற்றி ஏழை மாணவர்களுக்கு உதவும் வகையில் அவர் செய்துள்ளார். அப்பேற்பட்ட மறைந்த சர்வபள்ளி டாக்டர் ராதாகிருஷ்ணன் அவர்களின் பிறந்த நாளை போற்றும் விதமாக, திருத்தணியில் டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பயின்ற ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் அங்கு பணியாற்றும் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு கல்வி கற்பித்து வருகின்றனர். அவரது பிறந்தநாளை மாணவர்கள் நூதன முறையில் அவர் உருவப் படம் பொறித்த முகமூடி அணிந்து பள்ளி வளாகத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்து ஆசிரியர் தினத்தைக் கொண்டாடினார்கள். சிறந்த மாணவர்களை டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் போன்று உருவாக்கிட தங்களது பணியை அர்ப்பணிப்போடு தொடர்ந்து வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்ட செய்தியாளர் நவீன்.