ஊத்துக்கோட்டை, மார்ச். 21 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மா.மருதுபாண்டி
திருவள்ளூர் மாவட்டம் மற்றும் ஊத்துக் கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக கோடை வெயிலின் தாக்கம் மிகவும் அதிகரித்து வரும் நிலையில், இன்று திடீரென ஊத்துக்கோட்டை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் மழை பெய்ததால் அப்பகுதிகளில் வெப்பம் தனிந்து குளிர்ச்சியான சூழல் உருவாகியது அதனால் அப்பகுதி வாழ் பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் மகிழ்ச்சியடைந்தனர்.

















