திருவாரூர், ஏப். 04 –
திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரி ஒன்றியம், வெள்ளைக் கிராம பகுதியைச் சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட அப்பகுதியில் உள்ள விவசாயிகள் தாங்கள் சுமார் 500 லிருந்து 600 ஏக்கர் விளைநிலங்களில் விளைவித்து வந்த நெல்லினை உலர வைக்க பல ஆண்டுகளாக பயன்படுத்தி வந்த களத்தை சிலர் நபர்கள் ஆக்கிரமிப்பு செய்துள்ளனர் எனப் புகார் தெரிவிக்கின்றனர்.
மேலும் அக்களத்தினை ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்டு தரும்படி, அவ்விவசாயிகள் பேரணியாக சென்று மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.


















