காஞ்சிபுரம், மார்ச். 24 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் தினேஷ்
காஞ்சிபுரம் மாவட்டம் மாநகராட்சி பகுதிக்குட்பட்ட பல்லவர் மேடு வா.ஊ.சி நகரில் அமைந்துள்ளது மிகவும் பழமையான அருள்மிகு ஸ்ரீ மகா தீபாஞ்சாலியம்மன் ஆலயமாகும்.
அவ்வாலயத்தின் கும்பாபிஷேகப் பணி செய்திட அவ்வூர் மக்கள் முடிவெடுத்து அதற்கான புரணமைக்கும் பணி நடைபெற்று அப்பணி நிறைவடைந்தததை முன்னிட்டு அவ்வாலயத்தில் இன்று மஹா கும்பாபிஷேகம் விழாவனது வெகு விமரிசையாக நடைபெற்றது.
முன்னதாக கும்பாபிஷேக விழாவை யொட்டி கோவில் வளாகத்தில் யாக சாலை அமைக்கப்பட்டு பூஜை, கோ பூஜை, லஷ்மி ஹோமம, விசேஷ திரவ்ய ஹோமம் பூர்ணாஹதி நடைபெற்று இன்று காலை கஜ பூஜை, அஸ்வ பூஜைகள் செய்து மஹா பூர்ணாஹதி தீபாரதனைகள் நடைபெற்றது.
அதன் பின் ராஜ கோபுரம், விமானங்களுக்கு பல்வேறு நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனித நீர் ஊற்றப்பட்டு மஹா கும்பாபிஷேகமானது வெகு விமரிசையாக நடைபெற்றது. அதன் பின் அருள்மிகு ஸ்ரீ மகா தீபாஞ்சாலியம்மனுக்கு சிறப்பு தீப தூப தீபாராதனைகளும், சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. இந்த கும்பாபிஷேக பெரு விழா வினைக் காண சுற்று வட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான வந்திருந்தவர்கள் சாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேகம் நடைபெற்று கலசத்தில் ஊற்றப்பட்ட புனித நீரை பக்தர்கள் மீது தெளித்து கொண்டனர்.
மேலும் பொதுமக்கள் அனைவருக்கும் அருட் பிரசாதங்களும், அன்னதானங்களும் வழங்கப்பட்டது. மஹா கும்பாபிஷேக பெரு விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் விழா குழுவினர் வெகு சிறப்பாக நடைபெற்றது.
























