பொன்னேரி, மார்ச். 24 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி

திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரியில் உள்ள டாக்டர் எம்ஜிஆர் மீன்வள கல்லூரியில் நாடாளுமன்ற தேர்தலுக்காக வரவழைக்கப்பட்ட 404  வாக்குப்பதிவு பெட்டிகள் பாதுகாப்பாக வைக்கும் பணிகள் இன்று நடைபெற்றது.

அவ் வாக்குப் பதிவுப் பெட்டிகள் பொன்னேரி சாராட்சியர் வாகே சங்கெத் பல்வந்த் முன்னிலையில் வாகனங்களில் இருந்து சீல் வைக்கப்பட்ட நிலையில் இருந்த 404 தேர்தல் பெட்டிக்கள் இறக்கப்பட்டு, அதனைத் தொடர்ந்து  திமுக, அதிமுக, பாஜக, காங்கிரஸ் உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் நிர்வாகிகளின் முன்னிலையில் எடுத்து கல்லூரியில் உள்ள வகுப்பறைகளுக்குள் பாதுகாப்பாக வைக்கும் பணிகளை தொடங்கி வைத்தார்.

பாதுகாப்புக் குறித்து செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளை அவர் மேலும் உறுதிப்படுத்தும் வகையில் அதனை ஆய்வு மேற்கொண்டார். பின்னர் சிசிடிவி கேமரா மற்றும் துப்பாக்கி ஏந்திய காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்நிகழ்வின்போது சாராட்சியருடன், வட்டாட்சியர் மதிவாணன், தேர்தல் துணை வட்டாட்சியர் கனகவல்லி, துணை வட்டாட்சியர் சீனிவாசன், பல்வேறு கட்சியை சேர்ந்த வாக்கு பெட்டிகளை கண்காணிக்கும் பொறுப்பாளர்கள் ஜோதிஸ்வரன், அசோக் குமார், சரவணன், பாலமுருகன், சிற்றரசு,  ஸ்ரீதர்,  ஜெய்சங்கர், வீரபாண்டியன், பிரசன்னா, கோகுல் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here