திருவள்ளூர், ஏப். 23 –

தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் மாறன்…

திருவள்ளூர் அருகே CSI  தொடக்கப்பள்ளி புதிய கட்டிடம் கட்டும் பணியை திருவாலங்காடு ஒன்றிய தலைவர் ஜீவா விஜயராகவன் தொடங்கி வைத்தார்.

1942 -ஆண்டில் திருவள்ளூர் அடுத்த திருவலங்காடு ஒன்றியத்துக்கு உட்பட்ட பழையனூர் கிராமத்தில் கிறிஸ்துவ மிஷனரி கௌடி வில்லியம்ஸ், என்பவரால் தொடங்கப்பட்ட சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி சுமார் 80 ஆண்டுகளுக்கு மேலாக அப்பகுதியில் உள்ள பழமையான  தொடக்கப் பள்ளியாகும். மேலும் அப்பள்ளியில் படித்த மாணவ மாணவிகள்  தற்போது நல்லதொரு உயர்ந்த பதவியில் உள்ளதாக ஊர் பொதுமக்கள் தெரிவிக்கின்றனர்.

இந்நிலையில் தற்போது பழுதான நிலையில் உள்ளதால் அக்கட்டிடத்தில் குழந்தைகள் படிப்பதில் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர். மேலும் மாணவச் செல்வங்களுக்கு கல்வி எவ்வளவு முக்கியம் என்பதனை எடுத்துரைக்கும் திருக்குறளான “ஒருமைக்கண் தான்கற்ற கல்வி ஒருவற்கு எழுமையும் ஏமாப் புடைத்து. ஒரு பிறப்பில் தான் கற்றக் கல்வியானது அப்பிறப்பிற்கு மட்டும் அல்லாமல் அவனுக்கு ஏழுபிறப்பிறப்பிலும் உதவும் தன்மை உடையது

இந்த திருக்குறளுக்கு இணங்க  ஊராட்சி மன்ற மன்ற தலைவர் ராஜேஸ்வரி சிவசங்கரன், தன் சொந்த செலவில் பள்ளியை கட்டிக் கொடுப்பதாக முன் வந்ததை அறிந்த கிராம பொதுமக்கள் தங்கள் பாராட்டுகளையும் வாழ்த்துக்களையும் தெரிவித்து வருகின்றனர்.

நிகழ்ச்சியில்  சிஎஸ்ஐ ஆயர் அருட்பணி லாசர், தாளாளர் கண்ணன் பேராயர் கூட்டுநர் ஜேம்ஸ், ஆல்பர்ட், திருப்பாச்சூர் குருசேகர பொருளாளர் பிரேம்குமார், செயலாளர் அந்தோணி, தாஸ்,  சிஎஸ்ஐ தொடக்கப்பள்ளி தலைமையாசிரியர் மேரி சுஜாதா,  உதவி ஆசிரியர் சீலா, ரோஸ்லின், மற்றும்  வார்டு உறுப்பினர்கள், கிராம பொதுமக்கள் இதில் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here