காஞ்சிபுரம், ஆக. 29 –
தமிழகத்தில் நாளை மறுநாள் 31 ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி விழா மிக கோலாகலமாக நடைபெறவுள்ளது. இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் விநாயகர் சதுர்த்தி விழா அமைதியான முறையில் கொண்டாட வேண்டி 300 காவலர்கள் பங்கேற்ற கொடி அணிவகுப்பு நடைபெற்றது. காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற காவலர்கள் அணிவகுப்பு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுதாகர் பங்கேற்று துவக்கி வைத்தார்.
காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் துவங்கிய இந்த அணிவகுப்பு ஊர்வலம், மேட்டு தெரு, மூங்கில் எலி மண்டபம், காமராஜர் சாலை, பேருந்து நிலையம், நான்கு ராஜ வீதி என காஞ்சிபுரம் மாநகரின் முக்கிய வீதிகளில் இந்த பேரணி நடைபெற்றது. காவலர்களுடன் காவலர்களின் வாகனங்களும் இந்த அணிவகுப்பு ஊர்வலத்தில் பங்கேற்றனர்.
கோவில் நகரம் காஞ்சிபுரம் என்பதால் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு காஞ்சிபுரம் நகரில் முக்கிய கோவில் வளாகத்தில் போலீசார் கூடுதல் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்த இருப்பதாக காவல்துறை அதிகாரிகள் தகவல் தெரிவித்தனர்.