கும்பகோணம், ஏப். 29 –
கும்பகோணத்தில் உள்ள தனியார் வங்கியின் வாடிக்கையாளர் ஒருவர் குடும்பத்துடன் வங்கியின் வாசலில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டதால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
கும்பகோணம் நாகேஸ்வரன் சன்னதியில், தனியார் வங்கி கிளை இயங்கி வருகிறது. இக்கிளையில், தாராசுரத்தில் பித்தளை பட்டறை வைத்து தொழில் நடத்தி வரும் ரவிச்சந்திரன் டைசி ராணி தம்பதியினர். இவ்வங்கியின் வாடிக்கையாளர் ஆவார்கள். இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ரூபாய் 2 கோடி மதிப்பிலான வீட்டை அடமானமாக வைத்து, தங்கள் வீட்டின் விரிவாக்கப் பணிக்காக, 10 ஆண்டு கால தவணை முறையில் திருப்பி செலுத்தும் வகையில், ரூபாய் 10 லட்சம் கடன் பெற்றுள்ளனர்.
இதில், வட்டியுடன் சேர்த்து கடந்த 3 ஆண்டுகளில், வட்டியும், முதலுமாக ரூபாய் 17 லட்சம் வரை செலுத்தியுள்ளதாக அவர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
மேலும், தாராசுரம் பகுதியில் உள்ள அரசியல் பிரமுகர் இச்ச சொத்தை அபகரிக்கும் முயற்சியில் ஈடுப்பட்டு வருவதாகவும், அதற்கு இக்கிளை மேலாளர் தாமரைச்செல்வன் அவருக்கு உதவிடும் வகையில், அவரிடம் பெரும் தொகை கையூட்டாக பெற்றுக் கொண்டு, சட்ட விரோதமாக, கொரோனா கால கட்டத்தில் செலுத்த தவறிய தவணயை காரணம் காட்டியும், வட்டி தொகையை முதலுடன் சேர்ந்து மேலும் பல லட்சம் உடனடியாக கட்ட வேண்டும் எனவும், கட்ட தவறினால் வீடு ஏலத்தில் விடப்படும் என மறைமுகமாக மிரட்டல் விடுத்து வந்ததுடன், இவர்கள் வசிக்கும் பகுதியில் உள்ள அனைத்து வீடுகளுக்கும், துண்டு பிரசுரங்கள் வழங்கி இக் குடும்பத்தினரை அவமதித்து, இவர்களுக்கு மன உளைச்சலை ஏற்படுத்தியதாக வங்கி கிளை மேலாளர் மீது குற்றம் சாட்டுகின்றனர்.
தொடர்ந்து, பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் தெரிவிக்கையில், தங்களது கணக்குப்படி ரூபாய் 2 லட்சத்தி 70 ஆயிரம் தான் திரும்ப செலுத்த வேண்டும் அதற்கு ஒரு மாத கால அவகாசம் கொடுத்தால் கட்டி முடித்து விடுதாக உறுதி கூறிய போதும், இதனை ஏற்காமல், நீங்கள் பணம் கட்டுவதற்காண நேரம் முடிந்து விட்டது. நீங்கள் இனி பணம் கட்ட முடியாது வீடு ஏலத்திற்கு வந்து விட்டது, நீங்கள் சட்டபூர்வமான நடவடிக்கைகை எதிர்கொள்ளுங்கள் நான் இதில் தலையிட முடியாது என கைவிரித்து விட்டதாக கூறுகிறார்கள்.
பத்து ஆண்டு கால திரும்ப செலுத்தும் வரம்பிலான ரூபாய் பத்து லட்சம் வீட்டு கடனிற்கு, 3 ஆண்டுகளில் மட்டும் ரூபாய் 17 லட்சம் தாங்கள் செலுத்திய பிறகும், மேலும் பல லட்சம் கட்ட வேண்டும் இல்லை என்றால் வீடு ஏலத்திற்கு வரும் என்றும், சம்மந்தப்பட்ட ரூபாய் 2 கோடி மதிப்பிலான சொத்தை அபகரிக்க முயலும் அரசியல் பிரமுகருக்கு உடந்தையாக அவரிடம் லஞ்சம் பெற்றுக் கொண்டு, கந்து வட்டிக்காரர்களை போல மிரட்டும் கிளை மேலாளர் தாமரை செல்வன் மீது புகார் தெரிவித்தவாறும், அவரது நடவடிக்கையை கண்டிப்பதாகக்கூறி, இன்று வீட்டு கடன் பெற்ற ரவிச்சந்திரன், அவரது மனைவி டைசி ராணி, மகள் அறிவுக்கரசி, மகன் அருள்ஜெயந்த்தேவன் ஆகிய நால்வரும் வங்கி கிளை முன்பு அமர்ந்து தர்ணா போராட்டத்தை துவங்கினர்.
இதனால் அங்கு திடீர் பரபரப்பு ஏற்பட்டது, இது குறித்து விவரம் அறிய கிளை மேலாளரை சந்திக்க முயன்ற போது, அவர் தங்களிடம் பேச எனக்கு ஒன்றும் இல்லை என பேசுவதை தவிர்த்து விட்டார். இது குறித்து தகவலின் பேரில் அங்கு கும்பகோணம் மேற்கு போலீசார் சம்பவயிடத்திற்கு வந்து, போராட்டத்தில் ஈடுபட்டிருந்து நான்கு பேரிடமும் சமரச பேச்சுவார்த்தை நடத்தி, அவர்களை கிளை மேலாளர் அறைக்கு அழைத்து சென்று, இப்பிரச்சனையை தீர்க்க முடிவு செய்தனர்,
இதனையடுத்து கிளை மேலாளர் மற்றும் வங்கி உயர் அலுவலர்களுடன் பேசிய பின், பாதிக்கப்பட்ட ரவிச்சந்திரன் குடும்பத்தினர் வீட்டுக்கடன் பாக்கி தொகை ரூபாய் 2 லட்சத்தி 70 ஆயிரத்தை இன்னும் ஒரு மாத காலத்திற்குள் திரும்பி செலுத்தி, வீட்டுக்கடனை முடித்துக் கொள்வதாக எழுத்துப்பூர்வமாக எழுதி கொடுத்ததை தொடர்ந்து தர்ணா போராட்டம் முடிவிற்கு வந்தது, இந்த போராட்டத்தை கண்ட பொது மக்கள் பலரும், பாதிக்கப்பட்ட குடும்பத்தினர் நிலையை கேட்டு, வங்கி கந்த வட்டிக்காரர்கள் போல களம் இறங்கி கடன் வாங்கியவர்களை இப்படி சிரமத்திற்கு உள்ளாக்குவதுக் குறித்து மனம் நொந்து முணுமுணுத்தபடி சென்றனர்.
பேட்டி : டைசிராணி ( ரவிச்சந்திரனின் மனைவி)




















