காஞ்சிபுரம், மார்ச். 08 –

இன்று காஞ்சிபுரம் புதிய ரயில் நிலையம் அருகே உள்ள மீன் மார்கெட் பகுதியில் துணை மேயருக்கு பாராட்டு விழா நடைபெற்றது.

காஞ்சிபுரம் மாநகராட்சி துணை மேயர் தேர்வில் திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சி சார்பில் போட்டியிட்டு காஞ்சிபுரம் மாமன்ற துணை மேயராக தேர்வு செய்யப்பட்டுள்ள குமரகுருநாதனுக்கு வணிகர் சங்கங்களின் தலைவர் கிருஷ்ணமூர்த்தி தலைமையில் நடைபெற்ற பாராட்டு விழாவில்  காஞ்சிபுரம் மாநகராட்சியின் முதல் துணை மேயர் குமரகுருநாதன் பங்கேற்றார். அவருக்கு பாராட்டும் வாழ்த்தையும் தெரிவித்து பல்வேறு சங்கங்களின் நிர்வாகிகள், பொறுப்பாளர்கள் என திரளானவர்கள் சால்வை அணிவித்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here