திருவாரூர், மே. 21 –

திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே இன்று பாஜக மகளிர் அணி சார்பில் தமிழக அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் அவ்வார்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் திமுக அரசின் திறனற்ற நடவடிக்கைகளால் ஏற்பட்டுள்ள கள்ளச்சாராய விற்பனை தமிழகத்தில் கொடிக்கட்டி பறப்பதாகவும், மேலும் அதனால் அப்பாவி மக்கள் 21 பேர் கள்ளச்சாரயத்தினைக் குடித்து பலியான துயரச்சம்பவம் நடந்துள்ளதாக அவர்கள் அப்போது குற்றம் சாட்டினார்கள்.

மேலும் இதுப்போன்ற துயரச்சம்பவங்கள் தமிழ்நாட்டில் நடைப்பெறாமல் தடுத்திட திமுக தலைமையிலான தமிழ்நாடு அரசு உரிய நடவடிக்கைகளை மேற் கொள்ள வேண்டும் எனவும் அப்போது முழக்கங்கள் எழுப்பினார்கள்,

மேலும் துயர்ச்சம்பவம் நடைப்பெற்றதை தடுக்கத் தவறிய திமுக அரசை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டவர்கள் முழக்கங்களை எழுப்பினார்கள்.

தொடர்ந்து இத்துயர சம்பவம் ஏற்பட காரணமான உண்மையான குற்றவாளிகளை பாரபட்சமின்றி கைது செய்ய கோரியும்  மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக வாயிலில் முழக்கங்களை அவர்கள் எழுப்பினார்கள்.

இந்த ஆர்ப்பாட்டம் மாவட்ட மகளிர் அணி தலைவி ரமாமணிபாஸ்கர் தலைமையிலும்,  மாவட்ட பொதுச்செயலாளர் சி செந்தில் அரசன் முன்னிலையிலும் நடைப்பெற்றது. மேலும், மாவட்ட தலைவர் எஸ் பாஸ்கர் மாவட்ட மேலிட பார்வையாளர் பேட்டை பி சிவா ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை நிகழ்த்தினார்கள்.

அக்கண்டன உரையின் போது அவர்கள் தமிழக அரசு பதவி விலக வேண்டும் எனவும், அத்துறைச் சார்ந்த அமைச்சர் செந்தில் பாலாஜியை உடனடியாக அமைச்சர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் எனவும், மேலும், டாஸ்மாக்கில் நிர்ணயிக்கப்பட்ட விலையை விட கூடுதல் விலை வசூலிக்கும் அமைச்சரின் ஆட்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவர்கள் வலியுறுத்தி கண்ட உரை நிகழ்த்தினார்கள்.

மேலும் இந்நிகழ்வில், மாநில செயற்குழு உறுப்பினர் ரஜினி கலைமணி , கோட்டூர் ராகவன் மற்றும் சி எஸ் கண்ணன் மாவட்ட செயலாளர் கே ரவி திருவாரூர் நகர தலைவர் எஸ் கணேசன் மகளிர் அணி பொதுசெயலாளர் அமுதா நாகேந்திரன் மாவட்ட மகளிர் அணி செயலாளர் காயத்ரி மாவட்ட செயலாளர் சுதாமணி மாவட்ட செயலாளர் ஓ பி சி அணி மல்லிகா பேரவை மாநில விவசாய அணி செயலாளர் கோ வி சந்துரு மாவட்ட துணை தலைவர்கள்  மணிமேகலை, மற்றும் சதா சதீஷ் ஊடகப் பிரிவு மாவட்ட தலைவர் கழுகு எஸ் சங்கர் கல்வியாளர் பிரிவு மாவட்ட தலைவர் சிவா மத்திய அரசு நலத்திட்ட பிரிவு தலைவர் வாசன் எஸ் நாகராஜன் பட்டியல் அணி மாவட்ட தலைவர் மாதவன் பிரச்சார பிரிவு மாவட்டத் தலைவர் இமயவரம்பன் பிரிவு மாவட்ட செயலாளர்கள் பேரளம் சதீஷ் குமார் நன்னிலம் பத்மநாதன் மன்னார்குடி கௌதமன் மற்றும் பாஜக மாநில செயற்குழு உறுப்பினர் சி எஸ் கண்ணன் மாவட்ட செயலாளர் கே பி ரவி அமைப்புசாரா பிரிவு மாவட்ட தலைவர் பிரபாகரன் திருவாரூர் நகர தலைவர் எஸ் கணேசன் ஆகியோர் உள்ளிட்ட திரளான பாஜக தொண்டர்கள் இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here