குடவாசல், பிப். 01 –
திருவாரூர் மாவட்டம், குடவாசல் அருகே வி.சி க. வை சார்ந்த நிர்வாகி ஒருவர் மர்ம நபர்களால் வெட்டி கொலை செய்யப்பட்டுள்ளார். இச்சம்பவம் குறித்து .குடவாசல் காவல்நிலையை போலீசார் வழக்கு பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவாரூர் அருகே அம்மையப்பன் ஆற்றங்கரை தெருவில் வசித்து வந்தவர் மதியழகன் மகன் கவியரசன் (22) மேலும் இவர், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கிளை கழக பொறுப்பாளராக பதவியில் இருந்து வந்துள்ளார். மேலும், இவர் தண்டலை பகுதியில் இயங்கி வரும் தனியார் பெட்ரோல் பங்க் ஒன்றில் வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள திருக்கண்ணமங்கையில் ஊராட்சி மன்ற தலைவர் ஜெயபால் என்பவர் உடல் நலக்குறைவால் இறந்ததையடுத்து, இன்று நடைபெற்ற அவரது இறுதி சடங்கில் கலந்து கொண்டு பின்பு கவியரசன் தனது பைக்கில் மாலை நான்கு மணியளவில் தனது வீட்டிற்கு திரும்பி சென்று கொண்டிருந்த நிலையில், திருக்கண்ணமங்கை to அம்மையப்பன் செல்லும் சாலையில் வயல் பகுதி ஒன்றில் காரில் வந்த மர்மகும்பல் கவியரசனை கழுத்து உட்பட பல்வேறு இடங்களில் சரமாரியாக வெட்டிவிட்டு அங்கிருந்து தப்பி ஓடியதாக தெரிய வருகிறது.
மேலும், சம்பவ இடத்திலேயே கவியரசன் ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்ததாகவும், அதனைத் தொடர்ந்து, தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த குடவாசல் போலீசார் இக்கொலை தொடர்பாக வழக்கு பதிவு செய்து கவியரசனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.
மேலும் இம்மர்மக் கொலை தொடர்பாக சம்பவ இடத்திற்கு திருவாரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் நேரில் வந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். மேலும் கொலை செய்யப்பட்ட கவியரசனுக்கும் அவர் வசித்து வந்த பகுதியில் இருக்கும் பிஜேபி கட்சியை சேர்ந்த ஒரு சிலருக்கும் இடையே முன் விரோதம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில், குடவாசல் காவல்நிலைய போலீசார் பல்வேறு கோணங்களில் இப்படுகொலை தொடர்பாக பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் இக்கொலை சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பேட்டி : வடிவழகன்.
விடுதலை சிறுத்தை கட்சி மாவட்ட செயலாளர் .
























