காஞ்சிபுரம், செப் . 28 –
தமிழகத்தில் ஒன்பது மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறவுள்ளது வேட்பாளர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அக்டோபர் 6 ஆம் தேதி மற்றும் 9 ஆம் தேதி என இரண்டு கட்டங்களாக நடைபெறும் வாக்கு பதிவு அன்று அனைவரும் 100 சதவிகிதம் வாக்களிக்க கோரியும், நேர்மையாக வாக்களிக்க கோரி காஞ்சிபுரம் அருகே ஏகனாம்பேட்டை இப்பகுதியிலுள்ள அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் உறுதிமொழி ஏற்கப்பட்டது
இதன் தொடர்ச்சியாக காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் ஆர்த்தி தேர்தல் விழிப்புணர்வு குறித்த மாணவர்களின் வரை படங்களை கண்டு ரசித்தார் அனைவரும் நூறு சதவிகிதம் வாக்களிக்க கோரியும் நேர்மையாக வாக்ககளிக்க கோரி நாடகங்கள் நடத்தி காண்பிக்கப்பட்டது.
பதாதைகள் ஏந்தியும் கோசங்களை எழுப்பி விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித் தலைவர் கொடியசைத்து துவக்கி வைத்தார் இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவியர்கள் பெண்கள் ஆசிரியர்கள் என 200-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
மேலும் இதன் தொடர் நிகழ்ச்சியாக மாதிரி தேர்தல் வாக்குசாவடி விழிப்புணர்வு குறித்து மாணவிகள், ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களுக்கு நடத்தப்பட்டது.