பாவங்கள் நீங்கி புண்ணியம் கிடைப்பதாக பக்தர்கள் புகழாராம்
செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
ராமநாதபுரம், ஆக.27-
சாய் பாபாவை ஒரு முறை தரிசனம் செய்தால் நம் பாவங்கள் நீங்கி விடும் என்பதால் மதத்திற்கு அப்பாற்ப்பட்டு அனைத்து தரப்பு மக்களும் ஷீரடி சாய்பாபாவை தரிசிக்க செல்கின்றனர். குறிப்பாக சாய்பாபா சிவனின் அவதாரமே என புராணங்களில் கூறுவதால் ராமேஸ்வரம் ராமநாத சுவாமியை தரிசிக்க செல்லும் பக்தர்கள் ராமநாதபுரத்தில் அருள் பாலித்து கொண்டு இருக்கும் ஷீரடி சாய்பாபாவை தரிசித்தால் பெரும் பாக்கியம் கிடைக்கிறது என பக்தர்கள் புகழாராம் சூட்டுகின்றனர்.
ஷீரடி சாய் பாபா இந்தியாவில் வாழ்ந்த ஒரு புனித துறவி ஆவார் . இவர் வாழ்ந்த காலத்தில் இவரிடம் வந்து பலர் ஆசி பெற்றனர். அவரிடம் வரும் பக்தர்களின் உடல் நலக்குறைவு மற்றும் நோயினை நீக்கும் வல்லமையும் இவரிடம் இருந்ததாக கருதப்படுகிறது. இந்து மற்றும் முஸ்லீம் மக்கள் அவரை கடவுளின் அவதாரமாகவே கருதினர். சிவன் மற்றும் பார்வதி சாய் பாபாவின் தாயாருக்கு காட்சியளித்து உனக்கு 3 குழந்தைகள் பிறக்கும் 3வது குழந்தையாக நானே அவதரிப்பேன் என அருள் வாக்கு கூறியுள்ளார். அதன் படி சாய் பாபா 3வது குழந்தையாக பிறந்துள்ளார். எனவே சாய் பாபா சிவனின் அவதாரம் என வரலாற்றில் கூறப்படுகிறது.
சிவனை தரிசிக்க ராமேஸ்வரம் செல்லும் பக்தர்கள் ராமேஸ்வரத்தில் ராமநாத சுவாமியை தரிசனம் செய்த உடன் சிவனின் அவதாரமாக விளங்கும் ராமநாதபுரத்தில் வீற்றிருக்கும் ஷீரடி சாய் பாபா கோயிலுக்கு சென்று வழிபட்டு வருகின்றனர். இவ்வாறு ராமநாதபுரத்தில் அருள் பாலித்து கொண்டிருக்கும் ஷீரடி சாய்பாபா
கோயில் நிர்வாகி அதி வீரபாண்டியன் கூறியதாவது:
நான் இந்த இடத்தில் அமர்ந்து பேசி கொண்டிருந்த போது திடீரென ஷீரடி சாய்பாபா தோன்றியது போல் ஒரு தோற்றம் ஏற்பட்டது. அதன் பிறகு ஷீரடியிலிருந்து சாய் பாபாவின் சிலையை மதுரையை சேர்ந்த நண்பர் ஆறுமுகம் என்பவர் கொண்டு வந்து என்னிடம் கொடுத்தார். நானும் பக்தர்களும் ராமநாதபுரம் சிவன் கோயிலிலிருந்து ஷீரடி சாய் பாபா சிலையை ஊர்வலமாக எடுத்து வந்து இந்த இடத்தில் பிரதிஷ்டை செய்தோம். பாபா ரமணி இந்த கோயிலுக்கு வந்து ஷீரடி சாய் பாபா கோயில் கும்பாபிஷேகத்தை நடத்தி கொடுத்தார்.அதன் பிறகு இங்கு சாய் பாபாவை தரிசிக்க வந்த பக்தர்கள் ஏராளமானோருக்கு பலவிதமான அற்புதங்கள் நடந்துள்ளதாக பக்தர்களே என்னிடம் அவ்வப்போது வந்து தெரிவிக்கின்றனர். உதாரணத்திற்கு 18 வயது பெண் ஒருவருக்கு சில ஆண்டுகளாக கர்ப்பப்பையில் கட்டி இருந்து மிகவும் சிரமப்பட்டு வந்துள்ளார். ஒரு முறை இந்த சாய் பாபா கோயிலுக்கு வந்து சாய் பாபாவிடம் மனம் உருகி வேண்டி சென்றார். சிறிது நாளில் அந்த கட்டி கரைந்து குணமடைந்து விட்டது. அதே போல் 8 ஆண்டுகளாக பிள்ளை வரம் இல்லாத தம்பதிகள் இங்கு வந்து வேண்டி சென்றனர். அவர்கள் வேண்டி சென்ற உடனே அந்த பெண் கர்ப்பமடைந்தார். இது போல் பல அற்புதங்கள் நடந்துள்ளன. கோயில் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை திறந்து இருக்கும். வியாழக்கிழமை அன்னதானம் நடைபெறும். ஆன்மிக யாத்திரிகர்கள் ராமேஸ்வரத்தில் ராமர் பாதம், கோதண்ட ராமர் கோயில், ராமர் தீர்த்தம், பஞ்சமுகி அனுமார், லட்சுமண் தீர்த்தம், சீதா தீர்த்தம், தண்ணீரில் மிதக்கும் கல், முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் நினைவகம், பாம்பன் பாலம், ராமர் தேவிபட்டினத்தில் நவகிரஹங்களை வைத்து சிவனை வழிபட்ட போது கடல் நீரால் நவகிரஹங்கள் தண்ணீரில் மூழ்கிய போது கடலின் அலைகளை நிறுத்திய கடல் அடைத்த பெருமாள் கோயில், நவபாஷனம் ஆகிய புண்ணிய இடங்களை தரிசித்து விட்டு வரும் போது ராமநாதபுரம் ராமேஸ்வரம் பைபாஸ் ரோட்டில் இடையர்வலசை கிராமத்தில் அருள்பாலித்து கொண்டிருக்கும் ஷீரடி சாய் பாபா கோயிலுக்கு செல்வதால் பக்தர்களுக்கு அனைத்து குறைகளும் நிவர்த்தி ஆவதுடன் நினைத்த காரியங்கள் கைகூடுகிறது. இதனால் பக்தர்கள் தற்போது ஷீரடி சாய் பாபாவை தரிசிக்க வந்து கொண்டு இருக்கின்றனர், என்றார்.
சாய் பாபா கூறிய நம்பிக்கை, பொறுமை இருந்தால் அனைவருக்கும் நலம் உண்டாகும் என்பது உண்மையாக உள்ளது. ராமநாதபுரம் ஷீரடி சாய்பாபா கோயிலுக்கு ஒரு முறை சென்று வந்தால் நல்லது நடக்கிறது என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது. இந்த கோயில் பற்றி மேலும் தகவல்கள் பெற கோயில் 94434 06919 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.