கும்போணம், செப். 08 –

கும்பகோணத்தில் உள்ள கொத்தன் ஒத்தை தெருவை சேர்ந்தவர் அய்யப்பன் என்பவரின் மகன் வினோத்குமார் (வயது 26) அதுப்போன்று திருச்சி, உறையூர், வெக்காளியம்மன் கோவில் தெருவில் வசித்து வருபவர் ராஜ்குமார் நிஷாந்தினி தம்பதியினர் இவர்களுக்கு இரண்டரை வயதில் ஜெகதீஸ்வரன் என்ற மகன் உள்ளார்.

ராஜ்குமாரும், வினோத்குமார் என்பவரும் தூரத்து அண்ணன் தம்பி உறவு முறையினர் ஆவர்கள். இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ராஜ்குமார் தனது மகன் ஜெகதீஸ்வரன் (2 1/2) மற்றும் குடும்பத்தினருடன் கொத்தன் ஓத்தை  தெருவில் உள்ள தனது உறவினரான வினோத் குமார் வீட்டிற்கு வந்து தங்கி உள்ளனர்.

இந்நிலையில் ரவிக்குமாரின் மனைவி நிஷாந்தினியின் அக்கா காயத்ரி அரசு தலைமை மருத்துவமனையில் மகப்பேறுக்காக சேர்க்கப்பட்டிருந்த நிலையில் அவருடன் மருத்துவமனையில் தங்கி நிஷாந்தினி அவரை பார்த்து வந்துள்ளார்.

அதனால் தாயிடம் இருந்த ஜெகதீஸ்வரனை பெரியப்பா உறவு முறையான வினோத்குமார் தன்னுடன் வீட்டிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்த ஃபிரிட்ஜை இரண்டரை வயது குழந்தை ஜெகதீஸ்வரன் அடிக்கடி திறந்து மூடியதால் ஆத்திரத்தில் குழந்தையின் அடி வயிற்றில் வினோத்குமார் ஓங்கி அடித்ததாகவும் அதனால் அக்குழந்தை பேச்சு மூச்சில்லாமல் தரையில் சுருண்டு விழுந்ததாகவும், அதனைத் தொடர்ந்து அரசு மருத்துவமனைக்கு குழந்தையை வினோத்குமார் எடுத்து சென்றுள்ளார். அங்கு குழந்தையை பரிசோதனை செய்த மருத்துவர் குழந்தை இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து தனது செயலை மறைப்பதற்காக வினோத்குமார் குழந்தையின் பெற்றோரிடம் தான் சாப்பாடு வாங்க இருசக்கர வாகனத்தில் அழைத்து செல்லும் போது, குழந்தைக் கீழே விழுந்து இறந்து விட்டதாக வினோத்குமார் கூறியுள்ளார். காவல்துறையினர் அவரிடம் தொடர்ந்து நடத்தி வந்த தீவிர விசாரணைக்குப் பிறகு வினோத்குமார் போலீசாரிடம் தான் அடித்ததால்தான் குழந்தை  உயிரிழந்தது என்றவாறு ஒப்புதல் வாக்கு மூலம் அளித்துள்ளார்.

அதனைத் தொடர்ந்து, கும்பகோணம் மேற்கு காவல்நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து வினோத்குமாரை கைது செய்து சிறையில் அடைத்தனர். 2 1/2 வயது குழந்தை உயிர்யிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here