செய்தி சேகரிப்பு இசக்கி சிவசங்கரன்
இராமநாதபுரம், ஆக. 27 –
தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகத்தின் 27 வது ஆண்டு துவக்க விழா நிகழ்ச்சி கடந்த ஆக 25 ஆம் தேதி இராமநாதபுரம் கிழக்கு மாவட்டம் தொண்டி பேரூர் சார்பில் பேரூர் அலுவலகத்தில் நடைப்பெற்றது. இந் நிகழ்ச்சிக்கு தமுமுக மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் ஜஃப்ரி தலைமை வகித்தார். தமுமுக மாவட்ட துணை செயலாளர் முகம்மது அலி, மாவட்ட ஊடக பிரிவு செயலாளர் பஹுருல்லா ஷா, மாவட்ட IPP செயலாளர் ஆலிம் அன்சாரி, ஒன்றிய தமுமுக மமக தலைவர் பீர் முகமது, ஒன்றிய மமக செயலாளர் தொண்டிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமுமுக மாநில செயலாளர் தொண்டி சாதிக் பாட்சா கழகத்தின் கருப்பு வெள்ளை கொடியேற்றி மருத்துவ உதவியாக ரூ.60,000/- கல்விஉதவியாக ரூ.25,000/- வாழ்வாதார உதவியாக ரூ.15,000/- வழங்கினார். அதன் தொடர்சியாக தொண்டி அன்பாலயா ஆதரவற்றோர் உண்டு உறைவிடபள்ளிக்கு உணவு பொருட்கள் வழங்கப்பட்டது.
இந்நிகழ்வில் தமுமுக வின் மூத்த உறுப்பினர் அப்துல்ரசாக் அவர்களுக்கு மாநில செயலாளர் பொன்னாடை அணிவித்து கௌரவித்தார். இந்த சிறப்பான நிகழ்வை தொண்டி பேரூர் தலைவர் காதர் தலைமையில் தமுமுக பேரூர் செயலாளர் நவ்வர் , மமக செயலாளர் பரகத் அலி, பொருளாளர் மைதீன், துணை செயலாளர் ஹம்மாது அகிய பேரூர் நிர்வாகிகள் ஏற்பாடு செய்திருந்தனர். அப்துல் ரஹ்மான், அக்பர், ஜலால், அப்துல்லா, அப்துல் ரஜாக், அபுபக்கர், அகமது இபுராஹிம், மில்கான், ஜாபர், பஹத், பாருக் அலி, அப்துல் ரஹிம், அப்துல் ரசீது, முஸ்தபா, அப்பாஸ், மூஸா, இபுராஹிம், அலிம்கான், செய்யது ஆகியோர் கலந்து கொண்டனர்.