சீர்காழி, மே. 13 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சந்திரசேகர்…
சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகே கணினி உதிரி பாகங்கள் விற்பணை கடைக்குள் எலியை வேட்டையாட வந்த 7அடி நீளம் கொண்ட மஞ்சள் சாரை பாம்பு. லாவகமாக பிடிக்கப்பட்டு வனப்பகுதியில் பாதுகாப்பாக விடப்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி புதிய பேருந்து நிலையம் அருகில் அருண் என்பருக்கு சொந்தமான கணினி உதிரி பாகங்கள் விற்பணை கடை உள்ளது. இவர் வழக்கம் போல் கடையை திறந்த போது கடை உள்ளே வினோத சப்தம் கேட்டுள்ளது. அந்த இடத்தை பார்த்த போது பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சியடைந்துள்ளார்.
உடனடியாக பாம்பு பிடிக்கும் நபரான பாம்பு பாண்டியனுக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த பாம்பு பாண்டியன் கடையின் அலமாரிக்கு பின்புறம் பதுங்கி இருந்த 7 அடி நீமுள்ள மஞ்சள் சாரை பாம்பை லாவகமாக பிடித்தார்.
கடைக்கு உள்ளே எலியை வேட்டையாட வந்த பாம்பு திரும்பி வெளியே செல்ல வழி தெரியாமல் கடைக்கு உள்ளேயே மறைந்துள்ளது தெரியவந்தது. பிடிபட்ட பாம்பு பாதுகாப்பான முறையில் கொண்டு சென்று வனப்பகுதியில் விடப்பட்டது.






















