கும்பகோணம், பிப். 07 –
தம்பட்டம்செய்திகளுக்காக மாவட்டச் செய்தியாளர் சாரங்கன் ரமேஷ்…
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் மாநகரில் தேசிய வேளாண் நிறுவனம் நவீன நேரடி நெல் சாகுபடி குறித்து செயல் விளக்கம் பயிற்சி கூட்டம், தேசிய வேளாண் நிறுவனம் செயல் இயக்குநர் இராமசுப்பிரமணியன், தலைமையில் தனியார் ஹோட்டலில் நடைபெற்றது.
மேலும் அம்முகாமில் வேளாண் வல்லுநர் ரமேஷ்ராஜா, துணை பொது மேலாளர் குணாளன், FPO வேளாண்மை மற்றும் சட்ட நுணுக்கங்கள் குறித்து இளையராஜா, பாரம்பரிய நெல் ரகங்கள் மற்றும் சிறுதானிய வணிகம் விற்பனை தலைவர் சரவணகுமார், ஆகியோர் விளக்கி பேசினார்கள்.
அதில் தஞ்சை, நாகை, திருவாரூர், திருச்சி ஆகிய 4 மாவட்டத்திலிருந்து சுமார் 120 க்கும் மேற்பட்ட விவசாயிகள் கலந்து கொண்டனர். இந்த பயிற்சியில் நேரடி நெல் விதைப்பு கருவியின் மூலம் நெல் விதைப்பு செயல் விளக்கம் செய்து காண்பிக்கப் பட்டது.
மேலும் டிரம் சீடர் மூலம் நேரடி நெல் விதைப்பு செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும், களை பராமரப்பு, பூச்சி தாக்குதல், நோய் தாக்குதல், எலி கட்டுப்பாடு மற்றும் நீர் மேலாண்மை, விவசாய தொழில் நுட்பங்கள் குறித்தும் இயற்கை விவசாயம், நாற்றங்கால் தயாரிப்பு, ஒரு ஏக்கருக்கு விதையளவு, நீர் தேவை, ஆட்கள் தேவை, சாகுபடி காலம், சராசரி சாகுபடி செலவு, சராசரி மகசூல், சராசரி வருமானம் குறித்தும், உழவு உற்பத்தி உருவாக்குதல் நோக்கம் செயல்பாடு உள்ளிட்ட பல்வேறு விதமான விளக்கங்களை விவசாயிகள் எளிய முறையில் புரிந்து பயன் பெறும் வகையில் வேளாண் துறை அலுவலர்கள் உரை நிகழ்தினார்கள்.