செங்கல்பட்டு, மே. 15 –
செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் மேற்கொண்டு வரும் பணிகளை சென்னை பெருநகர வளர்ச்சி குழும அமைச்சர் சேகர்பாபு ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.
அமைச்சருடன் சென்னை பெருநகர வளர்ச்சி குழும செயலாளர் அபூர்வா, செங்கல்பட்டு மாவட்ட ஆட்சியர் ராகுல்நாத் மற்றும் தாம்பரம் காவல் ஆணையர் அமல்ராஜ் உள்ளிட்ட உயர் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.
மேலும் இவ்வாய்வின் போது, அமைச்சர் போக்குவரத்து நெரிசலை கட்டுப்படுத்த கிளாம்பாக்கம் பேருந்து நிலைய சுற்று வட்டார பகுதிகளில் புதிய பாலம் அமைக்கும் பணிகள் குறித்து அரசு உயர் அலுவலர்களிடம் ஆலோசனை மேற் கொண்டார்.





















