கும்பகோணம், நவ. 27 –

தேசிய அரசியல் சாசன தினம் எனப்படும் சட்ட தினம் ஆண்டு தோறும் நவம்பர் 26 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. இந்திய அரசியல் சாசன சட்டம், கடந்த 1949-ம் ஆண்டு நவம்பர் 26 அன்று ஏற்றுக்கொள்ளப்பட்டது. இந்த நாள் அரசியல் சாசன சட்ட தினமாக ஆண்டுதோறும் கடைப்பிடிக்கப்பட்டு வருகிறது. அரசியல் சாசனத்தை உருவாக்க 2 ஆண்டுகள், 11 மாதங்கள், 18 நாட்கள் தேவைப்பட்டன. சாசனத்தின் இறுதி வடிவம், 395 ஷரத்துகள், 8 அட்டவணைகளைக் கொண்டுள்ளது. இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவரான ராஜேந்திர பிரசாத் அரசியலமைப்பு சபையின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அரசியலமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக அம்பேத்கர் இருந்தார். இவரே இந்திய அரசியல் சாசனத்தின் தந்தை என அழைக்கப்படுகிறார்.

இதனிடையே அரசியலமைப்பு தினத்தையொட்டி  சமத்துவம், சகோதரத்துவம், மதச்சார்பின்மை உள்ளிட்ட உயரிய விழுமியங்களைக் கொண்ட நமது அரசியலமைப்புச் சட்டத்தை உயர்த்திப் பிடித்து, அதனை வடித்துத் தந்த அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட அறிஞர் பெருமக்கள் விரும்பியபடி நமது நாட்டை முன்னோக்கி எடுத்துச் செல்ல அரசியலமைப்பு நாளில் உறுதி ஏற்று கொள்வோம். என்று,

கும்பகோணத்தில் விடுதலை சிறுத்தை கட்சி சார்பில் மாவட்ட செயலாளர் உறவுழகன் தலைமையில் அரசு போக்குவரத்து கழக வாயில் முன்பு உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து உறுதிமொழி ஏற்றுக் கொண்டனர்.

இந்நிகழ்வில், இளம் சிறுத்தை எழுச்சி பாசறை மாநில செயலாளர் தமிழனி மண்டல செயலாளர் விவேகானந்தன் அண்ணல் அம்பேத்கர் தொழிலாளர் போக்குவரத்து கழக பொதுச்செயலாளர் அண்ணாதுரை விவசாயி அணி மாநில துணைச் செயலாளர் நாகப்பன்  சட்டமன்ற தொகுதி செயலாளர்கள் தமிழன் சந்திரசேகர் முல்லைவளவன் மாவட்ட செய்தி தொடர்பாளர் முருகதாஸ் மாவட்ட அமைப்பாளர் தமிழ் வளவன் மாவட்ட துணை செயலாளர் செல்வராஜ் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர்கள் மனோகரன் சின்னை பாண்டியன் மாவட்ட பொருளாளர் கண்ணன் மற்றும் நிர்வாகிகள் பொறுப்பாளர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here