தஞ்சாவூர், ஏப்.29 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் சாரு …
இயற்கை வேளாண் விஞ்ஞானி நம்மாழ்வார் பிறந்த பிறந்தநாள் கருத்தரங்கம் மற்றும் இயற்கை பொருட்களின் விதை கண்காட்சி தஞ்சையில் நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் சார்பில் தஞ்சையில் இரண்டு நாட்கள் நடைபெற்றது.
நம்மாழ்வார் மக்கள் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற அவ்விழாவில் பல்வேறு இயற்கை ஆர்வலர்கள் மற்றும் தமிழ் ஆர்வலர்கள் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர். சிறந்த வேளாண் பெருமக்களுக்கு இயற்கை முறையில் பயிர் சாகுபடி செய்து சாதித்த விவசாயிகளுக்கு நம்மாழ்வார் விருது வழங்கப்பட உள்ளது. மேலும் அக் கருத்தரங்கில் பேசிய ஒருங்கிணைப்பாளரும் கம்யூனிஸ்ட் கட்சி மூத்த தலைவருமான சி.மகேந்திரன்
பூமி தோன்றிய காலத்திலேயே தனக்கான சிறப்பு இயல்புகளை கொண்ட மூத்த குடிமக்களின் வாழ்விடங்கள் தோன்றின. அதில் தமிழ் நிலம் காலத்தால் முந்திய நாகரிகங்களை வளர்த்துக் கொடுத்ததில் இன்று உலகத் தகுதியை பெற்று வருகிறது.
தமிழ் நிலம் ஆதிநிலம் என்பதற்கு கணக்கற்ற ஆதாரங்கள் உண்டு. எதிர்கால தமிழ்நாட்டிற்கான புதிய வாழ்க்கை முறை ஒன்றை நம்மாழ்வார் வழியில் இன்றைய தலைமுறை உருவாக்கி காட்ட வேண்டிய கட்டாயத்தை காலம் கட்டளையாக பிறப்பித்துள்ளது.
நாட்டில் குடிநீர் ஒரு விற்பனை பொருளாகிவிட்டது நாட்டில் மக்கள் அனைவருக்கும் குடிநீர் இலவசமாக வழங்க வேண்டும் ஒன்றிய மற்றும் மாநில அரசுகள் அதனை செய்ய வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.


















