கும்பகோணம், அக்.19 –
கும்பகோணம் அருகே திருப்பனந்தாள் காவல் சரகம், மானம்பாடி கிராமத்தைச் சேர்ந்த அனிதா மர்மமான முறையில் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் நேற்று முன்தினம் கார்த்தி கைது செய்யப்பட்ட நிலையில் தொடர்ந்து நேற்று கார்த்தியின் தந்தை பொன்னுசாமி, மனைவி சத்யா, சகோதரர் சரவணன் ஆகிய மூன்று பேரையும் திருப்பனந்தாள் போலீசார் கைது செய்து உள்ளனர்.
போலீசாரின் முதற்கட்ட விசாரணையில், வெளிநாட்டில் இருந்து அனிதா கணவர் அனுப்பிய பெருந்தொகை கார்த்தி குடும்பத்தினர் வாங்கிக் கொண்டு அனிதா திரும்ப கேட்ட போது, அதனை திருப்பி தராமல் அனிதாவை படுகொலை செய்து இருப்பதும் தெரியவந்துள்ளது.
இதற்கிடையில் கார்த்தியின் தந்தை பொன்னுசாமி, மனைவி சத்யா, சகோதரர் சரவணன் ஆகிய மூன்று பேரையும் நேற்றிரவு கும்பகோணம் குற்றவியல் நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட பின்னர் அவர்கள் அனைவரையும் சிறையில் அடைக்க கொண்டு செல்லப்பட்டனர்.