கலசபாக்கம், செப் . 25 –

திருவண்ணாமலை மாவட்டம் கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட அனைத்து அரசு தொடக்கப் பள்ளி மற்றும் நடுநிலைப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சீருடை தலைமை ஆசிரியர்களிடம் பெ.சு.தி.சரவணன் எம்எல்ஏ வழங்கினார்.

கலசப்பாக்கம் ஊராட்சி ஒன்றியத்தில் அரசு தொடக்கப்பள்ளிகள் 72 பள்ளிகளும் நடுநிலைப் பள்ளிகள் 18 பள்ளிகளும் உள்ளன. இந்த பள்ளிகளில் சுமார் 90 பள்ளிகளுக்கு கலசபாக்கம் எம்எல்ஏ அலுவலகத்தில் நடந்த நிகழ்ச்சியில் தமிழக அரசு வழங்கும் விலையில்லா சீருடை மாணவர்களுக்கு கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ.சு.தி.சரவணன் தலைமையாசிரியர் மூலமாக வழங்கினார்.

இதில் கலசபாக்கம் ஊராட்சி ஒன்றியக்குழு தலைவர் அன்பரசி ராஜசேகர், ஒன்றிய செயலாளர்கள் சிவக்குமார், வழக்கறிஞர் சுப்பிரமணியன், வட்டார கல்வி அலுவலர்கள் சுந்தர், சுப்பிரமணியன், மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பின் பட்டம்மாள் முனுசாமி, மற்றும் கழக நிர்வாகிகள் கல்வித் துறை அலுவலர்கள் ஆசிரியர்கள் உடனிருந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here