செவ்வாய் கிரகத்தில் ஆய்வு செய்த ரோவர் விண்கலம் 15 ஆண்டுகளுக்கு பின் செயலிழந்தது-நாசா அதிகாரப்பூர்வ அறிவிப்பு
வாஷிங்டன்:
செவ்வாய் கிரகத்தில் மனிதர்கள் வாழ்வதற்கான சூழ்நிலைகள் குறித்து ஆய்வு செய்வதற்காக அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி மையமான நாசா கடந்த 2003ம் ஆண்டு ஆபர்ச்சுனிட்டி என்ற ரோவரை டெல்டா 2 ராக்கெட் மூலம் அனுப்பியது.
இதையடுத்து லேசர் மூலம் செவ்வாய் கிரகத்தில் உள்ள பாறைகளை துளையிட்டு மாதிரிகளை சேகரித்து, ஆபர்ச்சுனிட்டி...
வெனிசுலாவில் அரசியல் நெருக்கடி-குவைடோவை ஆதரித்து புளோரிடாவில் உரையாற்றுகிறார் டிரம்ப்
வாஷிங்டன்:
எண்ணெய் வளம் மிக்க தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் கடுமையான பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் அரசியல் குழப்பமும் நீடிக்கிறது. அதிபர் தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்ற நிகோலஸ் மதுரோ, எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில், பதவியேற்றார். ஆனால் தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாகவும், மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும்...
துருக்கி ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி-1,112 பேரை கைது செய்ய உத்தரவு
அங்காரா:
துருக்கியில் கடந்த 2016-ம் ஆண்டு அதிபர் தாயீப் எர்டோகனின் ஆட்சியை கவிழ்க்க ராணுவத்தில் ஒரு பிரிவு முயற்சித்தது. ஆனால் மக்கள் ஆதரவுடன் அதிபர் அந்த புரட்சியை முறியடித்தார்.
அமெரிக்காவில் வசித்துவரும் துருக்கியை சேர்ந்த மத குரு பெதுல்லா குலென் தான், ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு காரணம் என தாயீப்...
அந்தமான் அருகே வங்கக்கடலில் மீண்டும் நிலநடுக்கம்
போர்ட்பிளேர்:
வங்கக்கடலில் நேற்று சென்னைக்கு வடகிழக்கே சுமார் 600 கி.மீ தொலைவில் நில நடுக்கம் ஏற்பட்டது. 5.1 ரிக்டரில் பதிவான இந்த நிலநடுக்கத்தின் அதிர்வு வட அந்தமான் போர்ட்பிளேர் மற்றும் சென்னையில் லேசாக உணரப்பட்டது.
இந்தநிலையில் இன்று அந்தமான் தீவுகள் மற்றும் அதனையொட்டியுள்ள வங்கக்கடல் பகுதியில் மீண்டும் நிலநடுக்கம் ஏற்பட்டது....
தாய்லாந்தில் பிரதமர் பதவிக்கு போட்டியிட தடை-இளவரசி பகிரங்க மன்னிப்பு
பாங்காக்:
தாய்லாந்து நாட்டில் 1932-ம் ஆண்டு மன்னராட்சி முடிவுக்கு வந்த பின்னர் அங்கு ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களாட்சி கவிழ்க்கப்படுவதும், ராணுவம் அரியணை ஏறுவதும் தொடர்கதையாக உள்ளது.
பொதுத்தேர்தலை நடத்தி ஜனநாயக ஆட்சியை கொண்டு வர வலியுறுத்தி மக்கள் போராட்டங்களில் குதித்தனர். ஆனால் ஒவ்வொரு ஆண்டும் பொதுத்தேர்தல் அறிவிக்கப்பட்டு பின்னர்...
பிரசார பேரணியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 14 பேர் பரிதாப பலி
அபுஜா:
நைஜீரியா அதிபராக பதவி வகித்து வரும் முகமது புஹாரியின் 4 ஆண்டு பதவிக்காலம் முடிவடைவதையொட்டி, நைஜீரியாவுக்கு வருகிற சனிக்கிழமை பொதுத்தேர்தல் நடத்தப்படுகிறது.
இதில் புஹாரி மீண்டும் அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார். அவருக்கு எதிராக முக்கிய போட்டியாளராக மக்கள் ஜனநாயக கட்சி சார்பில், நைஜீரியா முன்னாள் துணை அதிபர்...
அமெரிக்க ஜனாதிபதி தேர்தல்: இந்திய வம்சாவளி பெண் கமலா ஹாரிசை சிறந்த போட்டியாளர்- டிரம்ப்
வாஷிங்டன்:
அமெரிக்காவில் அடுத்த ஆண்டு (2020) நவம்பர் 3-ந் தேதி ஜனாதிபதி தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி டிரம்ப் மீண்டும் போட்டியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அப்படி டிரம்ப் போட்டியிட்டால் அவரை எதிர்த்து ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார் என்பது...
அமெரிக்கா-மெக்சிகோ எல்லைச்சுவர் பிரச்சினை-அரசுத்துறைகள் முடக்கத்தை தவிர்க்க புதிய உடன்பாடு
வாஷிங்டன்:
மெக்சிகோ எல்லையில் சுவர்கட்டும் ஜனாதிபதி டிரம்பின் திட்டத்துக்கு நிதி ஒதுக்க ஜனநாயக கட்சியினர் மறுத்ததால், பல்வேறு அரசுத்துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான நிதி மசோதா நிறைவேற்றப்படாமல் அரசுத்துறைகள் முடங்கின. அமெரிக்க வரலாற்றில் முதல்முறையாக 35 நாட்களுக்கு மேல் அரசுத்துறைகள் முடக்கம் நீடித்தது.
பல்வேறு கட்ட பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு சமீபத்தில் அரசுத்துறைகள்...
5 போலீஸ் அதிகாரிகள் கடத்தி கொலை
மெக்சிகோ சிட்டி:
மெக்சிகோவின் மேற்கு பகுதியில் உள்ள மிச்சோகன் மாகாணத்தில் போதைப்பொருள் கடத்தல் கும்பல் கடும் ஆதிக்கம் செலுத்தி வருகிறார்கள். இவர்களுக்கும், போலீசாருக்கும் இடையே மோதல் ஏற்படுவதும், இதில் பலர் கொல்லப்படுவதும் வாடிக்கையாக உள்ளது.
இந்த நிலையில், மிச்சோகன் மாகாணத்தின் துசான்ட்லா நகரில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த...
ஒரு நாளுக்கு மேல் நாயை கட்டிப்போட்டால் 6 மாதம் சிறை: வங்காளதேசத்தில் புதிய சட்டம் வருகிறது
டாக்கா:
வங்காளதேசத்தில் 1920-ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட ‘விலங்குகள் நலச்சட்டம்’ விலங்குகளை கொடுமைப்படுத்துதல், பலி கொடுத்தல் போன்றவற்றில் ஈடுபடுவோருக்கு சிறை தண்டனை அல்லது அபராதம் விதிக்க வழிவகை செய்ததது.
இந்த நிலையில் 1920-ம் ஆண்டு சட்டத்தை அடிப்படையாக கொண்டு புதிய வரைவு சட்டம் ஒன்றை வங்காளதேச அரசு உருவாக்கி உள்ளது. இது...
























