தி.மு.க. தொகுதி பங்கீட்டு குழுவுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை
சென்னை:
பாராளுமன்ற தேர்தலையொட்டி கூட்டணி கட்சிகளுக்கு தொகுதிகளை பிரித்து கொடுப்பதற்காக தி.மு.க.வில் தொகுதி பங்கீட்டு குழு அமைக்கப்பட்டுள்ளது. துரைமுருகன் தலைமையில் அமைக்கப்பட்டுள்ள இந்த குழுவில் அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி, எ.வ.வேலு, கே.என்.நேரு, பெரியசாமி, பொன்முடி ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு 10 தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கொங்குநாடு மக்கள் தேசிய...
மார்ச் 6-ல் சென்னை வருகிறார் மோடி: கூட்டணி தலைவர்களுடன் ஒரே மேடையில் பிரச்சாரம்
சென்னை:
மக்களவைத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் தமிழகத்தில் கூட்டணி பேச்சுவார்த்தைகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஆளும் அதிமுக தலைமையிலான கூட்டணியில் பாமக மற்றும் பாஜக ஆகிய கட்சிகள் இடம்பெற்றுள்ளன. தேமுதிகவை கூட்டணியில் சேர்க்கும் முயற்சியும் நடைபெறுகிறது. இதற்கான பேச்சுவார்த்தையை அதிமுக தலைவர்கள் தீவிரப்படுத்தி உள்ளனர்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி...
பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுவது உறுதி-தமிழிசை சவுந்தரராஜன்
சென்னை:
அ.தி.மு.க. கூட்டணியில் பா.ம.க.வுக்கு 7 தொகுதிகளும், ஒரு மேல் சபை தொகுதியும், பா.ஜனதாவுக்கு 5 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
அ.தி.மு.க. கூட்டணியில் மேலும் சில கட்சிகள் இடம்பெறும் என்று கூறி வருகிறார்கள். தே.மு.தி.க., புதிய தமிழகம் போன்ற கட்சிகள் இடம்பெறலாம் என்ற எதிர்பார்ப்பு உள்ளது. இந்த கூட்டணியில் இன்னும் இணையும்...
இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடத் தயார்-பாரிவேந்தர்
சென்னை:
இந்திய ஜனநாயக கட்சி தலைவர் பாரிவேந்தர் தனியார் தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டி வருமாறு:-
ஐ.ஜே.கே.யை பொறுத்தவரை எப்போதுமே பா.ஜனதாவுக்கும், மோடிக்கும் விருப்பமான நிலையிலேயே சென்று கொண்டிருக்கிறோம். 2014-ம் ஆண்டு தாமரை சின்னத்தில் போட்டியிட்டோம். இந்த முறை நாங்கள் அவர்களோடு தொடர்ந்து இருந்து கொண்டிருக்கிறோம் என்று பல நேரங்களில் சொல்லி...
அதிமுக கூட்டணிக்கு தேமுதிக வரும் என்ற நம்பிக்கை உள்ளது-கே.பி.அன்பழகன்
கம்பைநல்லூர்:
தருமபுரி மாவட்டம் பொம்மிடியில் உயர்கல்வித் துறை அமைச்சர் கே.பி.அன்பழகன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழகத்தில் அம்மா வழியில், முதல்-அமைச்சர் மற்றும் துணை-முதல் அமைச்சர் இருவரும் சிறப்பாக ஆட்சி நடத்தி வருகின்றனர்.
இதனை கண்டு அ.தி.மு.க.வில் இருந்து விலகி சென்றவர்கள், பாப்பிரெட்டிபட்டி பகுதியில் உள்ள 50-க்கும் மேற்பட்டோர் அம.மு.க.வில்...
பாராளுமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு?-மு.க.அழகிரி பேட்டி
ஆலந்தூர்:
சென்னை விமான நிலையத்தில் முன்னாள் மத்திய மந்திரி மு.க.அழகிரி நிருபர்களிடம் கூறியதாவது:-
பாராளுமன்ற தேர்தலில் என்னுடைய ஆதரவு யாருக்கு? என்பதை இப்போது சொல்ல மாட்டேன். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் தெரிவிக்கிறேன்.
கடந்த தேர்தலில் என்ன முடிவு வந்ததோ? அதுபோல் தான் இந்த முறையும் தி.மு.க-காங்கிரஸ் கூட்டணியின் வெற்றி வாய்ப்பு இருக்கும்.
இவ்வாறு...
அண்ணா பல்கலைக்கழக மாணவர் சேர்க்கை குழுவில் இருந்து துணைவேந்தர் சூரப்பா விலகல்
சென்னை:
அண்ணா பல்கலைக் கழக துணைவேந்தராக இருக்கும் சூரப்பா பொறியியல் படிப்புக்கான (பி.இ.) மாணவர் சேர்க்கை குழுவின் தலைவராக இருந்து வந்தார்.
இந்த நிலையில் மாணவர் சேர்க்கை குழு தலைவர் பதவியில் இருந்து சூரப்பா திடீர் என்று ராஜினாமா செய்தார். அவர் தனது பதவி விலகல் கடிதத்தை உயர் கல்வித்துறை...
சென்னை ஐகோர்ட்டில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி கோரி வழக்கு
சென்னை:
ஸ்டெர்லைட் ஆலை சுற்றுச்சூழலை மாசுப்படுத்தி, நோய்களை பரப்புவதாக கூறி அந்த ஆலையை உடனே மூட வேண்டும் என்று கடந்த ஆண்டு மே மாதம் 22-ந் தேதி பொது மக்கள் மிகப்பெரிய போராட்டம் நடத்தினார்கள். அப்போது போராட்டக்காரர்கள் மீது போலீசார் நடத்திய கண் மூடித்தனமான துப்பாக்கி சூட்டில் 13...
கவர்னர் செயலாளரின் தாயை கவனிக்க டாக்டர்களுக்கு மிரட்டல்-வைகோ கண்டனம்
சென்னை:
ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-
தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் செயலாளர் பொறுப்பில் உள்ள ராஜகோபாலின் தாயார் சரஸ்வதி உடல் நலக்குறைவால் சென்னை ராஜீவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்தார்.
அவரைக் கவனித்துக் கொள்ள சென்னை மருத்துவக் கல்லூரி முதுநிலை மருத்துவ...
பாகிஸ்தானிடம் கைதியாக பிடிபட்ட சென்னை விமானப்படை அதிகாரியை விடுவிக்க ஸ்டாலின் வலியுறுத்தல்
சென்னை:
பாகிஸ்தான் எல்லைக்குள் இன்று நுழைந்த இரு போர் விமானங்களை சுட்டு வீழ்த்தியதாக பாகிஸ்தான் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வீழ்த்தப்பட்ட இரு விமானங்களில் ஒன்று பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் உள்ள காஷ்மீரின் கோஹி ரட்டா பகுதியில் விழுந்து தீப்பற்றி எரியும் காட்சிகளை அந்நாட்டு ஊடகங்கள் வெளியிட்டுள்ளன.
இந்திய விமானப்படையின் வீரர் அபினந்தனை...














