பொன்னேரி, மே. 04 –
தம்பட்டம் செய்திகளுக்காக செய்தியாளர் பாலகணபதி…
திருவள்ளூர் மாவட்டம், பொன்னேரி அருகேவுள்ள கூடுவாஞ்சேரியில் சுமார் 50 வயதுடைய பெண் அவருடைய வீட்டின் அருகே உடல் முழுவதும் தீயில் எரிந்து அடையாளம் தெரியாத அளவில் கரும்கட்டை போல் சடலமாக கிடந்தார். மேலும் அவரது இறப்புக்கான காரணம் குறித்து பொன்னேரி போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
கூடுவாஞ்சேரி பகுதியை சேர்ந்தவர் கற்பகம் வயது (50). அவரது கணவர் சேகர், மேலும் கணவருக்கு உடல் நலக் குறைவு ஏற்பட்டிருந்த நிலையில் கற்பகம் தமது மகன் நவீனுடன் வசித்து வந்தாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றிரவு வீட்டின் வெளியே தூங்கிய கற்பகம் இன்று அதிகாலை வீட்டின் அருகே உள்ள குட்டையின் ஓரத்தில் தீயில் கருகி உடல் முழுவதும் எரிந்த நிலையில் சடலமாக கிடந்துள்ளார்.
அதனைக் கண்ட அப்பகுதி வாழ் மக்கள் உடனடியாக பொன்னேரி காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அத்தகவலறிந்து சம்பவயிடத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர் தீயில் கருகி எரிந்த நிலையில் இருந்த சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்விற்காக பொன்னேரி அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து கற்பகத்தின் மர்ம மரணம் குறித்து வழக்குப் பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.
மேலும் அவர்கள் நடத்திய முதற்கட்ட விசாரணையில் கற்பகத்தின் மகன் நவீன் சென்னையில் உள்ள ஐடி நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வருவதாகவும், மேலும் அங்கு ஒரு பெண்ணை காதலித்து வந்ததாகவும், அது தொடர்பாக தமது தாயாரிடம் சென்னைக்கு குடி பெயர்ந்து செல்வோம் என அழைத்துள்ளார். எனவும் தெரிவித்துள்ளார்.
அவரின் தாயார் கற்பகமோ தான் சொந்த ஊரை விட்டு வர முடியாது என மறுப்பு தெரிவித்ததாகவும், அது தொடர்பாக கடந்த 2 நாட்களாக தாய் மகனிடையே தகராறு இருந்து வந்த தாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளதாக காவல்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.
இந்நிலையில் நேற்றிரவு தனது வீட்டின் வெளியே கற்பகம் தூங்கிவுள்ளார் எனவும் அதனிடையே நள்ளிரவு சுமார் 2 மணியளவில் தமது மகனிடம் தண்ணீர் வாங்கி குடித்துள்ளார். எனவும் தகவல் தெரிய வருகிறது.
பின்னர் அதிகாலை பார்த்த போது உடல் முழுவதும் தீயில் எரிந்து கருகிய நிலையில் கற்பகம் அப்பகுதியில் ஓடையில் கிடந்தது அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் தெரிய வந்துள்ளது.
மகனுடன் ஏற்பட்ட குடும்ப தகராறினால் விரக்தியில் தானே உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீ வைத்து தற்கொலை செய்து கொண்டாரா ? அல்லது வேறுக் காரணம் ஏதாவது கற்பகத்தின் மர்ம மரணத்தில் உள்ளதா ! என்றவாறு பல்வேறு கோணங்களில் தங்களது விசாரணையை பொன்னேரி காவல்துறையினர் மேற் கொண்டு வருகின்றனர்.
பெண் ஒருவர் வீட்டின் அருகே எரிந்த நிலையில் கண்டெடுக்கப்பட்ட அச்சம்பவம் அப்பகுதியில் பெருத்த அதிர்ச்சியையும், பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






















