நாசிக்கில் வருமான வரித்துறையினர் நடத்திய சோதனையில் கணக்கில் காட்டப்படாத ரூ.100 கோடி வருவாய் கண்டுப்பிடிக்கப்பட்டது.
நாசிக்கில் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வரும் நபருக்குச் சொந்தமான இடங்களில் வருமான வரித்துறையினர் கடந்த 21ம் தேதி சோதனை நடத்தினர். இதில் நில ஒப்பந்தங்கள் உட்பட பல போலி ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன. சொத்துக்கள் வாங்க மிகப் பெரிய அளவில் பணப்பரிமாற்றம் செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் பறிமுதல் செய்யப்பட்டன....
விமான தாக்குதலில் முக்கிய பங்காற்றிய 2 கேரள வீரர்கள்
திருவனந்தபுரம்:
காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் நடந்த தற்கொலைத் தாக்குதலில் 40 துணை ராணுவ வீரர்கள் பலியானார்கள்.
பாகிஸ்தான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்கு இந்திய ராணுவம் நேற்று முன்தினம் பதிலடி கொடுத்தது.
ராணுவத்தின் விமானப்படை வீரர்கள், பாகிஸ்தானுக்குள் ஊடுருவி பயங்கரவாதிகளின் முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தனர். சில மணி நேரங்களில் நடந்த இந்த தாக்குதலில்...
அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு ரூ.3000 ஓய்வூதியம் அளிக்கும் திட்டம்-பிரதமர் தொடங்கி வைத்தார்
அகமதாபாத்:
பாராளுமன்றத்தில் கடந்த மாதம் மத்திய அரசின் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டபோது நாடு முழுவதும் உள்ள சுமார் 42 கோடி அமைப்புச் சாரா தொழிலாளர்கள் பயனடையும் வகையில் ’பிரதான் மந்திரி ஷ்ரம் யோகி ஓய்வூதிய திட்டம்’ விரைவில் தொடங்கப்படும் என இடைக்கால நிதிமந்திரி பியுஷ் கோயல் குறிப்பிட்டிருந்தார்.
இந்த திட்டத்தின்கீழ்,...
இந்தியாவில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட்-19 தடுப்பூசி எண்ணிக்கை 161.92 கோடியைக் கடந்தது … சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை...
புதுதில்லி, ஜன. 23 -
நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 71 லட்சத்துக்கும் அதிகமாக (71,10,445) தடுப்பூசி டோஸ்கள் செலுத்தப்பட்டுள்ளன. இத்துடன் நாட்டில் செலுத்தப்பட்ட மொத்த கொவிட் தடுப்பூசிகளின் எண்ணிக்கை, இன்று காலை 7 மணி நிலவரப்படி 161.92 கோடியைக் (1,61,16,92,270) கடந்தது. 1,74,72,203 அமர்வுகள் மூலம்...
நடப்பு நிதி ஆண்டுக்கான தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி வட்டி 8.65 சதவீதம்
புதுடெல்லி:
இ.பி.எப். என்று அழைக்கப்படும் தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிக்கு, நடப்பு நிதி ஆண்டில் (2018-19) 8.65 சதவீத வட்டி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த தகவலை மத்திய தொழிலாளர் நலத்துறை மந்திரி சந்தோஷ் கங்குவார், டெல்லியில் நேற்று வெளியிட்டார்.
இதுபற்றி மேலும் அவர் கூறும்போது, “நடப்பு நிதி ஆண்டில் தொழிலாளர்...
விவசாயிகளுக்கு ரூ.6 ஆயிரம் அளிக்கும் திட்டம்: பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
புதுடெல்லி:
மத்திய பட்ஜெட்டில் நாடு முழுவதும் ஏழை விவசாயிகளுக்கு தலா ரூ.6000 உதவித் தொகை வழங்கும் திட்டம் அறிவிக்கப்பட்டது.
5 ஏக்கருக்கும் குறைவாக நிலம் வைத்திருக்கும் சிறிய மற்றும் நடுத்தர விவசாயிகளுக்கு ஓராண்டில் தலா ரூ.2,000 வீதம் 3 தவணையாக வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 12 கோடி விவசாயிகள் இதன்மூலம்...
புல்வாமா தாக்குதலில் வீரமரணம் அடைந்தவரின் உடலை தோளில் சுமந்த ராஜ்நாத் சிங்
ஜம்மு:
காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் பாதுகாப்பு படை வாகனத்தின்மீது பயங்கரவாதி நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 40 வீரர்கள் உயிரிழந்தனர்.
காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்தில் மத்திய பாதுகாப்பு படையினர் மீது நேற்று நடந்த தற்கொலைப்படை தாக்குதல் குறித்து டெல்லியில் பிரதமர் மோடி தலைமையில் உள்துறை மந்திரி ராஜ்நாத் சிங்,...
ஸ்டெர்லைட் வழக்கில் நாளை தீர்ப்பு-சுப்ரீம் கோர்ட்டு அறிவிப்பு
புதுடெல்லி:
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க அனுமதி வழங்கியதற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் விசாரணை முடிவடைந்த நிலையில் அந்த வழக்கின் தீர்ப்பு நாளை (திங்கட்கிழமை) வழங்கப்படும் என சுப்ரீம் கோர்ட்டு அறிவித்து உள்ளது.
தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தேசிய பசுமை தீர்ப்பாயம் அனுமதி வழங்கியதை எதிர்த்து தமிழக அரசு...
தாவரவியல் பூங்கா மூடப்பட்டுள்ளதால் உள்ளூர் குழந்தைகள் மற்றும் புதுச்சேரிக்கு வருகைத் தரும் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றுத்துடன் திரும்பிச் செல்லும்...
புதுச்சேரி, ஏப். 22 –
தம்பட்டம் செய்திகளுக்காக மாநிலச்செய்தியாளர் சம்பத் …
ஸ்மார்ட் சிட்டி திட்ட பணிகளால் தாவரவியல் பூங்கா மூடப்பட்டுள்ளதால் குழந்தைகள், புதுச்சேரியிக்கு வந்த சுற்றுலா பயணிகள் ஏமாற்றமடைந்துள்ளனர்.
புதுச்சேரி பழைய பேருந்து நிலையம் அருகில் உள்ளது தாவரவியல் பூங்கா 1826 இல் அமைக்கப்பட்ட இந்த பூங்கா இந்தியாவில் தலைசிறந்த...
காஷ்மீர் பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூட்டில் போலீஸ் துணை சூப்பிரண்ட் பலி
ஜம்மு:
ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தின் குல்காம் மாவட்டத்துக்கு உட்பட்ட டுரிகாம் பகுதியில் சில பயங்கரவாதிகள் பதுங்கி இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, இன்று அப்பகுதியை பாதுகாப்பு படையினர் சுற்றி வளைத்து தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.
அங்கு பதுங்கியிருந்த பயங்கரவாதிகள் பாதுகாப்பு...




















