Ads

ஆட்கள் தேவை | கல்யாண வரன் | மருத்துவம் | வணிகம் | பைனான்ஸ் | ரியல் எஸ்டேட் | கல்வி | சேல்ஸ் | ஆட்டோ மொபைல் | அஸ்ட்ராலஜி | சர்வீஸ் மற்றும் அனைத்துவிதமான விளம்பரங்களுக்கு ஒரு மாதம் முழுவதும் ரூ.3000 ஆயிரம் மட்டுமே! * நிபந்தனைக்குட்பட்டது.

Breaking News

மத்திய பிரதேசத்தில் ஆட்டோ மீது லாரி மோதல்-6 பேர் பலி

அசோக் நகர்: மத்தியபிரதேசத்தின் கரிலா கிராமப்பகுதியில் நடைபெற்ற திருமண விழாவில் கலந்து கொண்ட 6 பேர், நேற்று இரவு ஆட்டோவில் ஊருக்கு வந்துகொண்டிருந்தனர். விதிஷா சாலையில் பனாயி ஹவெலி கிராமத்தின் அருகில் வந்தபோது, அதே சாலையில் வந்த லாரி கட்டுப்பாட்டினை இழந்து ஆட்டோ மீது பயங்கரமாக மோதியது. ...

கூட்டணிக்காக யாருடனும் கைகுலுக்கிவிட முடியாது-கமல்ஹாசன் பேட்டி

புதுடெல்லி: மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவர் கமல்ஹாசன் திடீர் பயணமாக நேற்று புதுடெல்லி சென்றார். ஒரு தனியார் தொலைக்காட்சியின் நிகழ்ச்சிக்காக சென்று இருந்த அவர் அந்த நிகழ்ச்சி ரத்தாகிவிட ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளரான அரவிந்த் கெஜ்ரிவாலை சந்தித்தார். அப்போது பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடும் தன் கட்சிக்கு...

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் மீண்டும் மருத்துவமனையில் அனுமதி

கோவா முதல்வர் மனோகர் பாரிக்கர் கணைய அழற்சி நோயால் அவதிப்பட்டு வருகிறார். இதற்காக, வெளிநாட்டில் சிகிச்சை பெற்ற மனோகர் பாரிக்கர், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையிலும் தங்கி சிகிச்சை எடுத்துக்கொண்டார். இந்த நிலையில், மனோகர் பாரிக்கர் மீண்டும் உடல் நலக்குறைவால் கோவாவில் உள்ள மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவரது உடல்நிலை...

எந்த நேரத்திலும் பாகிஸ்தான் தாக்கலாம்-எல்லையில் தயார் நிலையில் இந்திய விமானப்படை

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில் ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தி 40 துணை ராணுவ வீரர்களை கொன்றதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை இன்று அதிரடி தாக்குதலை நடத்தி உள்ளது. ஆக்கிரமிப்பு காஷ்மீர் பகுதியில் உள்ள பயங்கரவாத முகாம்களை குண்டுகள் வீசி...

புல்வாமா தாக்குதல் எதிரொலி – இந்திய கிரிக்கெட் சங்க தலைமையகத்தில் இம்ரான் கான் படம் நீக்கம்?

மும்பை: இந்திய கிரிக்கெட் சங்கத்தின் தலைமையகம் மும்பையில் உள்ளது. பாகிஸ்தான் ஆதரவு பெற்ற ஜெய்ஷ்-இ-முஹம்மத் பயங்கரவாத இயக்கத்தை சேர்ந்த ஒருவன் புல்வாமாவில் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் இந்திய துணை ராணுவப்படையை சேர்ந்த 40 வீரர்கள் உடல் சிதறி, உயிரிழந்தனர். இதனால், இந்திய மக்களிடையே பாகிஸ்தான் மீதான கோபமும், எதிர்ப்புணர்வும் அதிகரித்துள்ளது....

கொல்கத்தாவில் உள்ள ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் இணைய வானொலி அமைப்பு அறிமுகம்

இந்தியாவில் உள்ள முக்கிய துறைமுகங்களில் முதல் முறையாக, கொல்கத்தாவில் உள்ள ஷியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் இணைய வானொலி அமைப்பு (ரேடியோ ஓவர் இன்டெர்நெட் புரோட்டோக்கால்) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. நீண்டதூர கடல்சார் தகவல் தொடர்பை இதன் மூலம் சிறப்பாக மேற்கொள்ள முடியும். மழைக்காலங்கள் மற்றும் மோசமான வானிலைகளின் போது கொல்கத்தாவில்...

இன்று மாலை நடைதிறப்பு-பெண்கள் வர வாய்ப்புள்ளதால் சபரிமலையில் மீண்டும் பதட்டம்

திருவனந்தபுரம்: சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவிலில் அனைத்து வயது பெண்களும் சாமி தரிசனம் செய்யலாம் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. இதற்கு ஐயப்ப பக்தர்களிடம் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. இதனால் ஐயப்ப பக்தர்களும், இந்து அமைப்புகளும் கேரளாவில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். சபரிமலை கோவில் நடைதிறப்பின்போது, சபரிமலை செல்லும் இளம்பெண்களையும்...

பணியின்போது உயிர்நீத்த காவல்துறையினருக்கு காவலர் நினைவு தினத்தில் பிரதமர் அஞ்சலி

பணியின்போது உயிர்நீத்த காவல்துறையினர் அனைவருக்கும் பிரதமர் நரேந்திர மோடி அஞ்சலி செலுத்தியுள்ளார். பிரதமர் வெளியிட்டுள்ள சுட்டுரைச்செய்தியில்; “காவலர் நினைவு தினத்தில், சட்டம் ஒழுங்கை பராமரிப்பதிலும் அவசர காலங்களில் தேவைப்படுவோருக்கு உதவுவதிலும் நமது காவல் படைகளின் தலைசிறந்த பணிகளை ஒப்புக்கொள்ள விரும்புகிறேன். பணியின் போது உயிர்நீத்த காவல் துறையினர் அனைவருக்கும் எனது...

விமானப்படை தாக்குதல்: இந்திய விமானப்படைக்கு தலைவணங்குகிறேன்-பிரதமர் மோடி

சுரு: ராஜஸ்தானின் சுரு பகுதியில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவிற்கு எதிரான எந்தவொரு செயலையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க மாட்டோம். யாரிடமும் இந்தியா அடிபணியாது. எதற்காகவும் நாட்டை விட்டுக் கொடுக்க மாட்டேன். இன்று காலை இந்திய விமானப்படையினர் நடத்திய தாக்குதலை...

ராஜஸ்தானில் மேலும் 79 பேருக்கு பன்றிக்காய்ச்சல்-பலி எண்ணிக்கை 112 ஆக உயர்வு

புதுடெல்லி: ராஜஸ்தான் மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் பன்றிக்காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது. இந்த ஆண்டில் இதுவரை ராஜஸ்தான் மாநிலத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 100-ஐ தாண்டியது. பார்மர், ஜெய்சால்மர், ஜெய்ப்பூர், உதய்பூர் மற்றும் சிட்டோர்கர் ஆகிய பகுதிகளில் நேற்று 5 பேர் பலியாகினர். இதன்மூலம் இந்த ஆண்டின் துவக்கம்...
- Advertisement -

MOST POPULAR

HOT NEWS