திருமணத்துக்கு பின் மீண்டும் சினிமாவில் லைலா
தமிழில் 1999-ல் கள்ளழகர் படம் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் லைலா. இப்படத்தை தொடர்ந்து ‘முதல்வன், ரோஜா வனம், பார்த்தேன் ரசித்தேன், தில், நந்தா, காமராசு, பிதாமகன், உன்னை நினைத்து, மவுனம் பேசியதே, கண்டநாள் முதல்’ உள்பட பல படங்களில் நடித்துள்ளார். தெலுங்கு, இந்தி, கன்னட படங்களிலும் நடித்து...
ஷங்கரிடம் உதவி இயக்குனராகவே இந்தியாவுக்கு வந்தேன்-பிரியா ஆனந்த்
வாமனன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமான பிரியா ஆனந்த் தொடர்ந்து எதிர்நீச்சல், அரிமா நம்பி என வேகமாக முன்னணி நடிகையானார். சில ஆண்டுகள் படங்கள் இல்லாமல் இருந்த அவர் நடிப்பில் சமீபத்தில் வெளியாகியிருக்கும் எல்கேஜி படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
அடுத்ததாக துருவ் விக்ரம் நடிக்கும்...
மீண்டும் சிக்கலில் எனை நோக்கி பாயும் தோட்டா – இந்த மாத இறுதியில் ரிலீஸ்?
கவுதம் மேனன் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள எனை நோக்கி பாயும் தோட்டா நீண்ட நாட்களாக கிடப்பில் உள்ளது. 2016-ம் ஆண்டிலேயே இதன் படப்பிடிப்பு தொடங்கிய நிலையில், கடந்த ஆண்டு இறுதியில் முழு படப்பிடிப்பும் முடிந்தது. சமீபத்தில் தணிக்கை குழு படத்திற்கு யூ/ஏ சான்றிதழ் வழங்கியது.
இதைடுத்து படத்தை திரைக்கு...
நடிகர் அபி சரவணன் மீது அதிதி மேனன் சென்னை கமிஷனர் அலுவலகத்தில் புகார்
கேரள நாட்டிலும் பெண்களுடனே, பட்டதாரி ஆகிய படங்களில் நடித்தவர் அபி சரவணன். இவருக்கு ஜோடியாக பட்டதாரி படத்தில் அதிதி மேனன் நடித்திருந்தார். இப்படத்திற்கு பிறகு இருவருக்கும் காதல் ஏற்பட்டது. சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டார்கள்.
இந்நிலையில், நடிகை அதிதி மேனன் இன்று சென்னை கமிஷனர் அலுவலகத்திற்கு வந்து...
விஸ்வாசம்: தெலுங்கு, கன்னட மொழிகளில் ரிலீசுக்கு தயாராகிறது
அஜித்-சிவா கூட்டணி நான்காவது முறையாக இணைந்த ‘விஸ்வாசம்‘ திரைப்படம் கடந்த பொங்கல் அன்று வெளியானது. அஜித், நயன்தாரா, அனிகா, விவேக், தம்பி ராமையா, யோகி பாபு, ரோபோ சங்கர் என மிகப்பெரிய நடிகர் பட்டாளத்தை கொண்ட இந்த படம் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது.
குடும்ப ரசிகர்களைப் பெரிதும்...
என்ஜிகே டீசர்-அரசியல்வாதியாக சூர்யா
செல்வராகவன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் பெரும் எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் உருவாகி இருக்கும் திரைப்படம் `என்ஜிகே' அரசியல் கலந்த திரில்லர் படமாக உருவாகும் இதில் சூர்யாவுடன் சாய் பல்லவி, ரகுல் ப்ரீத்தி சிங் நடித்துள்ளனர்.
இந்த படத்தின் டீசர் இன்று மாலை 6 மணிக்கு வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்த நிலையில்,...
சாயிஷாவுக்கு காதல் வாழ்த்து சொன்ன ஆர்யா திருமண அறிவிப்பையும் வெளியிட்டார்
தமிழ் சினிமாவில் முன்னணி கதாநாயகனாக இருப்பவர் ஆர்யா. 2005-ல் வெளியான அறிந்தும் அறியாமலும் படத்தில் அறிமுகமானார். பட்டியல், நான் கடவுள், மதராசபட்டணம், வேட்டை, ராஜா ராணி, இரண்டாம் உலகம், கடம்பன், கஜினிகாந்த் என்று பல முக்கிய படங்களில் நடித்துள்ளார். ஆர்யாவுக்கு 38 வயது ஆகிறது.
கடந்த வருடம் தொலைக்காட்சியில்...
தல 59 படத்தில் இணைந்த மூத்த நடிகர்
அஜித் தற்போது எச்.வினோத் இயக்கத்தில் பிங்க் படத்தின் ரீமேக்கில் நடித்து வருகிறார். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், வித்யா பாலன், ரங்கராஜ் பாண்டே, ஆதிக் ரவிச்சந்திரன், அபிராமி வெங்கடாசலம் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர்.
தற்போது இந்த கூட்டணியில் நடிகர் டெல்லி கணேஷ் இணைகிறார் என்று தகவல் வெளியாகி உள்ளது. ஏற்கனவே...
தமிழ் படங்களில் நடிக்க டாப்சி ஆர்வம்
தமிழ், தெலுங்கு படங்களில் பிசியாக நடித்து வந்த டாப்சி, தற்போது இந்தி படங்களில் கவனம் செலுத்தி வருகிறார். இந்தியில் அவர் நடித்த படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்திருக்கிறது. தற்போது தமிழில் `கேம் ஓவர்' என்ற படத்தில் நடித்திருக்கிறார். இந்த நிலையில் டாப்சி அளித்த பேட்டியில் கூறியதாவது,
“நான் கதாநாயகியாக...
பெண்கள் மீது மரியாதை, பெண்கள் முன்னேற்றத்திற்கு முக்கியத்துவம் அளிக்கும் பாலாஜி-பிரியா ஆனந்த்
பிரபு இயக்கி உள்ள ‘எல்.கே.ஜி’ படத்தில் ஆர்.ஜே.பாலாஜி, பிரியா ஆனந்த், நாஞ்சில் சம்பத், ராம்குமார் கணேசன், மயில்சாமி ஆகியோர் நடித்துள்ளனர். சமீபகால அரசியல் நிகழ்வுகளை மையப்படுத்தி ஆர்.ஜே.பாலாஜி இந்தக் கதையை உருவாக்கி இருக்கிறார்.
இந்த படத்தின் போஸ்டர்கள், டிரைலர், பாடல்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. வரும் பிப்ரவரி...




















