சீனு ராமசாமி இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் `கண்ணே கலைமானே’ படம் வருகிற பிப்ரவரி 22-ஆம் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், உதயநிதி தனது அடுத்த படத்தை துவக்கியிருக்கிறார்.

சஸ்பென்ஸ் கலந்த கிரைம் திரில்லர் பாணியில் உருவாகும் இந்த படத்திற்கு கடந்த வாரம் பூஜை போடப்பட்ட நிலையில், படப்பிடிப்பு இன்று துவங்குவதாக படக்குழு அறிவித்துள்ளது.

`இரவுக்கு ஆயிரம் கண்கள்’ படத்தை இயக்கிய மு.மாறன் இயக்கும் இந்த படத்திற்கு `கண்ணை நம்பாதே’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் உதயநிதி ஸ்டாலின், ஆத்மிகா முன்னணி கதாபாத்திரங்களில் நடிக்க, சதீஷ் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.

லிபி சினி கிராப்ட்ஸ் சார்பில் வி.என்.ரஞ்சித் குமார் தயாரிக்கும் இந்த படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைக்க, ஸ்ரீதர் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொள்கிறார். ஷான் லோகேஷ் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here