திருவாரூர், ஆக. 23 –
திருவாரூர் மாவட்டம் குடவாசல் அருகே உள்ள பூங்காவூர் கிராமத்தில் இன்று காலை கதண்டு வண்டு கடித்து பத்து பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதில் பாதிக்கப்பட்ட பூங்காவூர் கிராமத்தைச்சேர்ந்த ரவி 48 பாலையன் 70 அன்பழகன் 70 முணியாண்டி 48 உள்ளிட்ட பத்து பேர் திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு அவர்களுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகின்றனர். மேலும் இதுப்போன்று ஆர்ப்பாவூர் மற்றும் நாகை மாவட்டத்தைச் சேர்ந்த 3 பேர் கதண்டு வண்டு கடித்து சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.