தமிழ்நாடு தடகள சங்கம் சார்பில் இந்திய தடகள சம்மேளனம் ஆதரவுடன் 6-வது தேசிய ஓபன் நடைப்பந்தயம் சென்னையில் நேற்று தொடங்கியது. தொடக்க நாளில் 20 கிலோ மீட்டர் தூரம் போட்டி நடந்தது. இதில் இந்தியா, மலேசியா, சீன தைபேயை சேர்ந்த 86 வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
ஆண்கள் பிரிவில் கேரளாவை சேர்ந்த இர்பான் ஒரு மணி 20 நிமிடம் 10 வினாடியில் கடந்து முதல் இடத்தை பிடித்தார். தேவேந்திரசிங் (அரியானா) 2-வது இடத்தையும் சஞ்சய் குமார் (அரியானா) 3-வது இடத்தையும் பிடித்தனர்.
பெண்கள் பிரிவில் கேரளாவை சேர்ந்த சவுமியா 1 மணி 40 நிமிடம் 25 வினாடியில் கடந்து வெற்றி பெற்றார். பிரியங்கா (உத்தர பிரதேசம்), 2-வது இடத்தையும், ரவினா (அரியானா) 3-வது இடத்தையும் பிடித்தனர்.
2-வது நாளான இன்று காலை 20 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான 10 கிலோ மீட்டர் தூர நடைப்பந்தயம் நடந்தது. இதில் உத்தரகாண்ட் வீராங்கனை ரோஜி படேல் வெற்றி பெற்றார். அவர் பந்தய தூரத்தை 53 நிமிடம் 38 வினாடியில் கடந்தார்.
மத்திய பிரதேசத்தை சேர்ந்த சுவர்ணாகப்சே 55 நிமிடம் 36 வினாடியில் கடந்து 2-வது இடததையும், பஞ்சாப் வீராங்கனை குர்பிரீத் கவூர் 57 நிமிடத்தில் கடந்து 3-வது இடத்தையும் பிடித்தனர்.