ஆர்.கே.பேட்டை, டிச. 17 –

திருவள்ளூர் மாவட்டம், ஆர்.கே.பேட்டை ஊராட்சி ஒன்றிய ஊராட்சியில் உள்ள அம்மையார்குப்பம் கிராமத்தில் வ.ஊ.சி.தெரு, திரு.வி.க. தெரு, சிறு தொண்டர் தெரு ஆகிய தெருக்களின் ஒருங்கிணைந்த கழிவு நீர் கால்வாயின் கழிவுநீர் குடியிருப்பு பகுதியில் வெளியேற்றப் படுவதால் அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வாசிகள் பயன்படுத்தும் நிலத்தடி நீர் மாசுப்பட்டு பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளது. இதனால் அப்பகுதியில் வசிக்கும் மக்கள் பெரும் சிரமத்திற்கு ஆளாகிவுள்ளனர். மேலும் சிலர் அப்பகுதி தாங்கள் வசிக்க தகுதியில்லாத பகுதியாக உள்ளது. என்று அங்கு வசித்து வந்த இடத்தை விட்டு வேறு பகுதி சென்றுள்ளனர். என அப்பகுதிமக்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் திட்டமிடாது கட்டப்பட்ட அக்கழிவு நீர் கால்வாய் குடியிருப்பு பகுதிகளில் வசிக்கும் மக்களை பாதிக்கும் வகையில் உள்ளதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அக்கால்வாய் திறந்த வெளி கால்வாயக அமைக்கப்பட்டதால் அதில் அப்பகுதியில் வசிக்கும் சிறு குழந்தைகள் அடிக்கடி அக்கால்வாயில் விழுந்து அதிஷ்டவசமாக சிறு காயங்களுடன் தப்பித்து வரும் சூழலோடு வாழ்ந்து வரும் அவலமும் அப்பகுதியில் அடிக்கடி நிகழ்வதாகவும் கூறுகின்றனர். திறந்திருக்கும் கழிவு நீர் கால்வாய் சுத்தப்படுத்தாமலே வெகு நாட்கள் இருப்பதால் துற்நாற்றம் ஏற்படுவது மட்டுமல்லாது, காலரா, மலேரியா போன்ற நோய் தொற்று மற்றும் தோல் சம்பந்தப்பட்ட நோய்கள் ஏற்படும் அபாயத்துடன் தாங்கள் அங்கு வசித்து வருவதாக அப்பகுதி மக்கள் மனவேதனையுடன் கூறுகின்றனர். இது குறித்து ஏற்கனவே ஆர்.கே.பேட்டை வட்டார வளர்ச்சி அலுவலருக்கு ( கி.ஊ ) நூற்றுக் கணக்கான அப்பகுதி மக்கள் கையொப்பம் கொண்ட புகார் மனுவோடு அங்கு நிகழும் அவலநிலைக் குறித்த புகைப்படத்தை இணைத்து அனுப்பி உள்ளதாகவும் அது குறித்து உடனடி நடவடிக்கை எடுக்க அவசரக்குறிப்பு ஆணை அவர் பிறப்பித்து ஐந்து மாதங்கள் ஆன பின்னும் இன்னும் இதுவரை வட்டார துணை வளர்ச்சி அலுவலர் மற்றும் பொறியாளர்கள், துறை சார்ந்த அலுவலர்கள் யாரும் வந்து கள ஆய்வு நடத்தப்படவில்லை எனக் குறிப்பிடுகிறார்கள். மேலும் அப்பகுதி மக்கள் ஏன் இந்த பிரச்சினைக் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் அலட்சியப் போக்கை அரசு அலுவலர்கள் கடைப்பிடித்து மௌனம் காக்கின்றார்கள். இவர்கள் செயல் பாட்டால் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற தமிழக முதலமைச்சரின் விரைந்து செயல்படுத்தும் திட்டத்தையே கேள்விக் குறியாக்கும் வகையில் உள்ளதாக குறிப்பிடுகிறார்கள். இனியாவது இப்பிரச்சினைக் குறித்து உரிய நடவடிக்கைகளை விரைந்து எடுத்திட வேண்டும் என மாவட்டம், ஒன்றியம் மற்றும் ஊராட்சி அளவிலான துறைச்சார்ந்த அலுவலர்களுக்கு கோரிக்கை வைக்கின்றனர். 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here