சென்னை, அக். 01-21 –

இன்று அக் 01 தேசிய ரத்தத்தான தினமாக அரசு சார்பில் கொண்டாடப் படுகிறது. இந்நாளை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள ரத்ததான செய்தியில் இரத்ததானத்தை ஊக்குவிக்கும் வகையில் புதிய இந்தியா @ 75 என்ற தலைப்பில் முதற்கட்டமாக 14 மாவட்டங்களில் தேர்ந்தெடுக்கப்பட்ட பள்ளி, கல்லூரி மாணாக்கர்களுக்கு ஓவியப் போட்டியும் மற்றும் இணையதள வினாடி வினாப் போட்டியும் நடத்தப்பட்டு வருகிறது. எனக் குறிப்பிட்டுள்ளார்.

இரத்ததான முகாம்களில் சேகரிக்கப்படும் இரத்தத்தினை இரத்த மையங்களுக்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக சேமிக்க ரூ.175 இலட்சம் செலவில் குளிர்சாதன வசதிகளுடன் கூடிய அதிநவீன 5 நடமாடும் இரத்த சேமிப்பு ஊர்திகள் வழங்கப்பட உள்ளது. அரிய வகை இரத்த சிவப்பணுக்களை 10 ஆண்டுகளுக்கு மேல் சேமித்து வைக்க சென்னை இராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனையில் ரூ. 375 இலட்சம் செலவில் உறை நிலை சேமிப்பு அலகு அமைக்கப்பட உள்ளது. மேலும் இரத்தப் பைகளை காண்காணிக்க ரூ.208 இலட்சம் செலவில் மதுரை அரசு இராஜாஜி மருத்துவமனை, சென்னை இராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவ மனையில் கதிரியக்க அலைவீச்சு கருவி    ( Redio Frequency Identification Device )  பொருத்தப்பட உள்ளது.

கடந்த ஆண்டு அரசு, தனியார் இரத்த வங்கிகள் மூலம் 90 விழுக்காடு இரத்தம் சேகரிக்கப்பட்டது. நடப்பாண்டில் தன்னார்வ இரத்த தானத்தில் தமிழ்நாடு 100 விழுக்காடு இலக்கை எய்திடவும் விலை மதிப்பற்ற உயிர்களை காப்பாற்றிடவும் பொதுமக்கள் அனைவரும் பெருமளவில் தன்னார்வம் கொண்டு இரத்த தானம் செய்ய முன் வர வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஒவ்வொருவரின் உடலிலும் சுமார் ஐந்து லிட்டர் இரத்தம் உள்ளது. இரத்த தானத்தின் போது 350 மில்லி இரத்தம் மட்டுமே எடுக்கப்படுகிறது. இரத்த தானம் செய்த பின் 24 மணி நேரத்திற்குள்ளாகவே நம் உடல் இழந்த இரத்த த்தை ஈடு செய்துவிடுகிறது. இரத்த தானம் செய்ய காலநேரம் 20 நிமிடங்களே ஆகும். இரத்த தானம் செய்தவுடன் வழக்கம்போல் அன்றாட வேலைகளை மேற்கொள்ளலாம். 18 வயது முதல் 65 வயதுவரை உள்ள ஆரோக்கியமான ஆண் மற்றும் பெண் இருவபாலரும் மூன்று மாத த்திற்கு ஒருமுறை இரத்த தானம் செய்யலாம் . உரிய கால இடைவெளியில் இரத்த தானம் செய்வதால் இறைக்கின்ற கிணறு சரப்பதைப்போல் உடலில் புதியசெல்கள் உருவாகி உடல் நலன் காக்கப்படுகிறது. அரசு இரத்த வங்கிகள் மற்றும் இரத்த தான முகாம்களில் இரத்த தானம் செய்யலாம்.

ஆண்டு தோறும் குருதிக் கொடையாளர்களை தமிழ்நாடு அரசின் சார்பில் பாராட்டு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கி கௌரவித்து வருகிறது.  

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here