காஞ்சிபுரம், செப். 29 –
தமிழகத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட ஒன்பது மாவட்டத்தில் ஊரக உள்ளாட்சி தேர்தல் வரும் அக் 6 மற்றும் 9 ஆம் தேதிகளில் நடைபெறவதால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமுலில் உள்ளது.
இந்த சூழ்நிலையில் சென்னை – பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையில் வரும் வாகனங்களையும் காஞ்சிபுரம் நகர்க்குள் வரும் அனைத்து வாகனங்களையும் காஞ்சிபுரம் மாவட்ட காவல் கண்காப்பாளர் எஸ்.பி சுதாகர் நேரில் ஆய்வு மேற்கொண்டார்
தேர்தல் விதிமுறைகளை மீறி 50.ஆயிரத்திற்க்கும் அதிகமாக பணம் கொண்டு வருகின்றனரா, பட்டுசேலைகள், பாத்திரங்கள், பரிசு பொருட்கள் ஆகியவற்றை கொண்டு செல்கின்றனரா என திடீரென ஆய்வு மேற்கொண்டார்.