பூவிருந்தமல்லி, ஜூன். 26 –

சென்னை புறநகர் பகுதியான ஆவடி அடுத்துள்ள பூவிருந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட மேப்பூர் தாங்கல் பகுதியில் அமைந்துள்ளது மிகவும் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ கெங்கையம்மன் ஆலயமாகும். மேலும் இத்திருக்கோயிலில் நடைப்பெற்ற அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகத்தின் போது, அடிக்கப்பட்ட மேளதாள ஓசைக்கேட்டு நூற்றுக்கும் மேற்பட்ட பெண் பக்தைகளுக்கு அருள் வந்து திடீரென சாமியாடத் தொடங்கினார்கள். அதனால் அக்கோவிலைச் சுற்றியிருந்த பக்தர்களிடையே நெகிழ்ச்சி ஏற்பட்டு பக்தி பரவசத்தில் ஓம் சக்தி பராசக்தி என அருளோசை எழுப்பினார்கள்.

பூவிருந்தமல்லி நகராட்சிக்குட்பட்ட மேப்பூர் தாங்கல் பகுதியில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ கொங்கையம்மன் திருக்கோயிலில் பதினேழு ஆண்டுகளுக்கு பிறகு, இத்திருக்கோயிலுக்கு கும்பாபிஷேகம் நடத்திட அத்திருக்கோயில் திருப்பணிக்குழு மற்றும் அவ்வூர் மக்கள் முடிவெடுத்து அதற்கான திருப்பணிகள் முடிவடைந்த நிலையில், அக்கும்பாபிஷேகத்திற்கான நான்குகால பூஜைகள் நடைப்பெற்று பல்வேறு புண்ணிய நதிகளில் இருந்து கொண்டு வரப்பட்ட புனிதநீர் கடங்களில் நிரப்பப்பட்டு, அவை பூஜிக்கப்பட்டப் பின்பு, தொடர்ந்து, கடப்புறப்பாடு நடைப்பெற்று கோவிலை வலம் வந்து,

சிவச்சாரியார்கள் கும்ப கலசத்தின் மீது புனித நீர் ஊற்றப்பட்டு வெகுச்சிறப்பாக மகா கும்பாபிஷேகம் நடைப்பெற்றது. அப்போது ஒலிக்கப்பட்ட மேளதாள ஒசையினால் நூற்றுக்கும்மேற்பட்ட பெண் பக்தைகளுக்கு அருள் வந்து, சாமியாடத் தொடங்கினார்கள். அதனால் மேலும் தொடர்ந்து அரை மணிநேரத்திற்கும் மேலாக மேள ஓசை எழுப்ப பட்டது.

அதே வேளையில் இக் கும்பாபிஷேகத்தில் பங்கேற்ற ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொது மக்கள், நெகிழ்ச்சியடைந்து, பக்திப் பரவசத்தில் ஓம் சக்தி பராசக்தி என அருளோசை எழுப்பினார்கள். அப்போது பக்தர்கள் மீதும் பொதுமக்கள் மீதும் புனித நீர் தெளிக்கப்பட்டது. தொடர்ந்து அவர்கள் அனைவரும் கோபுரத்தரிசனம் மற்றும் சாமி தரிசனம் செய்து மன மகிழ்ந்தனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here