சென்னை, டிச. 16 –
சென்னை ஷனாய் நகர், வெங்கடசாமி நகர் கஜபதி தெருவில் அமைந்துள்ள கிரேமால்ட்ஸ் தனியார் மருத்துவமனையின் நிறுவனர் வில்லியம் கெர்ஷனின் நினைவாக தொழு நோயாளி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் புயல் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான தினக்கூலி தொழிலாளர்கள் உள்ளிட்ட நூறு நபர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த டிசம்பர் 14 ஆம் தேதி அம்மருத்துவமனை வளாகத்தில் நடைப்பெற்றது.
மேலும் இந்நிகழ்வில் மங்களம் சாரிடபிள் டிரஸ்ட் டாக்டர் ரேனுகா ராமகிருஷ்ணன் சிந்தனை செயல்முறையை தொடங்கி வைத்து, அறிமுகப்படுத்தினார். மேலும் ஏழை எளியவர்களுக்கு உதவி வரும் அவர்களின் பரந்த மனப்பான்மையை பாராட்டினார். தொடர்ந்து அவர் உரை நிகழ்த்தும் போது கிரேமால்ட்ஸ் மருத்துவமனை, மற்றும் சால்ஸ் கல்வி அகடாமி மற்றும் டாக்டர் ஸ்ரீமதிகேசன், ( ஸ்பேஸ் கிட்ஸ் இந்தியாவின் நிறுவனர் மற்றும் சிஇஓ ) பிற நன்கொடையாளர்களுக்கும் நன்றியினைத் தெரிவித்தார்.
தொடர்ந்து அவர் தெரிவிக்கும் போது பயனாளிகளுக்கு தற்போது இவர்கள் செய்த உதவியென்பது அப்பயனாளிகளின் வாழ்வில் வெளிச்சத்தை கொண்டு வந்துள்ளது எனவும் தெரிவித்தார். மேலும் உதவிப் பெற்ற அனைவரும் அவர்களின் இதயப்பூர்வமான வாழ்த்துக்களை தெரிவித்துக் கொண்டனர்.
இந்நிகழ்வில் சுமார் எழுபதுக்கும் மேற்பட்ட தொழு நோயால் பாதிப்பிற்குள்ளானவர்கள் இருபதுக்கும் மேற்பட்ட மாற்றுத்திறனாளிகள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட புயல் வெள்ளத்தால் பாதிப்புக்குள்ளான பத்துக்கும் மேற்பட்ட தினக்கூலி தொழிலாளர்கள் என நூற்றுக்கும் மேற்பட்ட பயனாளிகள் நலத்திட்ட உதவிகளை பெற்றனர்.























