சீர்காழி, மே. 25 –
தம்பட்டம் செய்திகளுக்காக சந்திரசேகர்…
சீர்காழி அருகே வெள்ளபள்ளம் கிராமத்தில் இறால்குட்டை அமைக்கப்பட்டுள்ளதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வரும் நிலையில் அது தொடர்பான அமைதி பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்படாத தால் அக்கூட்டத்தில் இருந்து கிராம மக்கள் வெளியேறியதால் அவ்வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழி அருகே புதுத்துறை ஊராட்சி வெள்ளபள்ளம் கிராமத்தில் 200 க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். உப்பனாற்றின் கரையோரம் அமைந்துள்ள இக்கிராமத்தில் சுற்றி அமைந்த இறால் குட்டைகளால் நிலத்தடிநீர் உப்பு நீராக மாறியது. பல்வேறு கட்ட போராட்டத்திற்கு பிறகு இறால் குட்டைகள் அகற்றப்பட்ட நிலையில் நிலத்தடிநீரின் தன்மை மாறி வருகிறது.
இதனிடைய கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தனியார் ஒருவர் அரசுத்துறை அனுமதி பெற்று மீண்டும் இறால்குட்டை அமைக்கும் பணியை தொடங்கினார். அதற்கு அப்பகுதி வாழ் கிராமமக்கள் எதிர்ப்பு அதிகரிக்கவே தற்காலிகமாக செயல்படுத்தாமல் இருந்து வந்தது.
இதனிடையே சீர்காழி வட்டாடாசியர் அலுவலக தலைமையிடத்து துணை வட்டாட்சியர் சாந்தி தலைமையில் இருதரப்பினரையும் அழைத்து அமைதி பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. கூட்டத்தில் இறால்குட்டை தொடர்பாக அனுமதி வழங்கிய ஆறு துறையினரும் ஒருங்கிணைந்து வெள்ளப்பள்ளம் கிராமத்தில் பொதுமக்கள் முன்னிலையில் கருத்து கேட்பு கூட்டம் நடத்தி மேற்படி இறால் குட்டை இயங்குவது தொடர்பாக நடவடிக்கை எடுக்கப்படும் என மீன்வளத்துறை உதவி இயக்குனரால் தெரிவிக்கப்பட்டது.
கிராம மக்களிடம் கலந்தாலோசித்து 1 வார காலத்திற்குள் தங்களது முடிவினை தெரிவிப்பதாக கிராமமக்கள் கூறிவிட்டு கூட்டத்திலிருந்து வெளியேறினர்.






















