சென்னை:

தி.மு.க. கூட்டணியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு, இந்திய கம்யூனிஸ்டு, ம.தி.மு.க, மனிதநேய மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள் கட்சி ஐ.ஜே.கே. கட்சிக்கு அதிகாரப் பூர்வமாக இடங்கள் இன்னும் ஒதுக்கீடு செய்யப்படாமல் உள்ளது.

ம.தி.மு.க. மற்றும் விடுதலை சிறுத்தைகள் கட்சிகளுடன் 2-ம் கட்ட பேச்சு வார்த்தை இன்று மாலை அறிவாலயத்தில் நடைபெறுகிறது. துரைமுருகன் தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவினர் இவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துகின்றனர்.

ம.தி.மு.க. 3 தொகுதிகளையும், விடுதலை சிறுத்தைகள் 2 தொகுதிகளையும் கேட்டு வருகிறது. மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சியும் இந்திய கம்யூனிஸ்டு கட்சியும் தலா 2 தொகுதிகளை கேட்டு வருகிறது.

கூட்டணி கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகளை ஒதுக்கலாம் என்று மு.க.ஸ்டாலின் ஏற்கனவே முடிவு செய்திருந்தாலும் துரைமுருகன் தலைமையிலான தொகுதி பங்கீட்டு குழுவினரின் கருத்தை இன்று கேட்டறிந்தார்.
இன்றும், நாளையும் அறிவாலயத்தில் கூட்டணி கட்சிகளுக்கான தொகுதி எண்ணிக்கை விவரங்களை அறிவித்து உடன்பாட்டில் கையெழுத்திட முடிவு செய்துள்ளனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here