மீஞ்சூர், மே. 21 –
மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தியின் 31 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சார்பில் ஏழை எளியவர்களுக்கு அன்னதானம். அரிசி .பருப்பு .உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா மீஞ்சூர் பஜார் பகுதியில் நடைபெற்றது.
விழாவிற்கு மீஞ்சூர் வட்டார காங்கிரஸ் பொறுப்பாளர்கள் தலைமை வகித்தனர் இதில் சிறப்பு அழைப்பாளராக பொன்னேரி தொகுதியில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் வழக்கறிஞர் சந்திரசேகர் கலந்து கொண்டு ஏழை எளியவர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி சிறப்பித்தார்.
இதில் வட்டார காங்கிரஸ் பொறுப்பாளர்கள் துரைவேல் பாண்டியன் .சித்திக்பாஷா. தாமோதரன் காமராஜ். ஜெயசீலன். காட்டுப்பள்ளி சரவணன். வினோத் குருசாலமோன் .பாலாஜி .தாரிக். தாஸ் அல்டாப் சாம்ராஜ் உள்ளிட்ட திரளான கட்சி தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர் முன்னதாக ராஜீவ் காந்தியின் புகைப்படத்திற்கு எம்எல்ஏ துரை சந்திரசேகர் மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.























