மீஞ்சூர், பிப். 25 –
மீஞ்சூர் அடுத்துள்ள திருவெள்ளைவாயல் பகுதியில் அமைந்துள்ள வாயலூர் அரசு மேல்நிலை பள்ளியில் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் கல்வி பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் சந்திப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.
திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரை அடுத்துள்ள திருவெள்ளைவாயல் பகுகுதியில் அமைந்துள்ள வாயலூர் ஊராட்சி அரசு மேல்நிலைப்பள்ளில் இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்கு முன் கல்விப் பயின்ற முன்னாள் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் சந்திப்பு இன்று நடைப்பெற்றது.
இப்பள்ளியில் தற்போது சுமார் 680 மாணவ, மாணவிகள் கல்விப் பயின்று வருகின்றனர். இந்நிலையில் கால் நூற்றாண்டை கடந்த பின்பும் தாங்கள் படித்த பள்ளிக்கு ஏதேனும் சிறப்பு செய்ய வேண்டும் என்ற எண்ணத்தில் இன்று அங்கு வந்த முன்னாள் மாணவர்கள் அப்பள்ளிக்கு தேவையான குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், மற்றும் பலவருடங்களாக பராமரிப்பு இல்லாமல் இருந்த அறிவியல் ஆய்வுக் கூடத்தை புதுப்பித்து அவற்றிற்கு வர்ணங்கள் பூசி புதியதாக மாற்றி பள்ளிக்கு வழங்கியுள்ளனர்.
மேலும் பள்ளியில் அமைந்துள்ள நூலகத்திற்கு புதிய நூல்களையும் புதிய புத்தக அடுக்குகளையும் வாங்கி அளித்ததுடன் முன்னாள் ஆசிரியர்களை அழைத்து அவர்களுக்கு சிறப்பு செய்து ஆரத்தி எடுத்து அவர்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெற்று அவர்களுக்கு மரியாதை செலுத்தினார்கள்.
இந்நிகழ்வின் போது முன்னாள் மாணவர்கள் ஆசிரியர்களின் கால்களில் விழுந்து ஆசீர்வாதம் பெறுவதை பார்த்து ஆசிரியர்கள் கண்கலங்கினார்கள். மேடையில் பேசிய முன்னாள் மாணவர்கள் இங்கு அமர்ந்திருக்கும் ஆசிரியர்கள் நாங்கள் படிக்கும் பொழுது எங்களை மிகுந்த கண்டிப்புடன் வழி நடத்தினார்கள்.
ஆனால் அக்கண்டிப்பு எங்களை அப்போது காயப் படுத்தியிருந்தாலும் இன்றுதான் அதற்கான காரணம் புரிகிறது. அவர்களின் அப்போதைய கண்டிப்போடு கூடிய வழிகாட்டுதல்தான் எங்களைப் பக்குவப்படுத்தி இன்று சமூதாயத்தில் தலை நிமிர்ந்து நடக்க கூடிய மதிப்பு மற்றும் மரியாதையை அளித்துள்ளது. அதன் விளைவாக இன்று இவ்வூரின் தலைவராகவும் எங்களால் ஆக முடிந்தது. தொடர்ந்து மேடையில் உங்கள் முன் இப்படி பேசவும் முடிந்தது என்றார்கள்.
அச்சிறப்பு மிக்க உரை அனைவராலும் பாராட்டும் படி அமைந்தது. மேலும் இதை பார்க்கும் இந்நாள் மாணவர்கள் கண்டிப்பு நம்மை கனிவாக்கும் நல்ல மனிதனாக்கும் என்பதை புரிந்து கொள்ள வேண்டுமென அப்போது அவர்கள் தெரிவித்தனர்.
மேலும் இப் பள்ளிக்கு கடந்த இரண்டு மாதங்களுக்கு முன் இதுப்போன்று நடைப்பெற்ற முன்னாள் மாணவர்களின் முயற்ச்சியால் மூன்று லட்சம் ரூபாய் சீர் செய்த நிலையில், இன்று அதே போன்று கால் நூற்றாண்டை கடந்த மாணவர்கள் ஐந்து லட்சம் ரூபாய் மதிப்பிலான பராமரிப்பு பணிகளை செய்திருப்பது உண்மையில் இப் பள்ளிக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம் என்று கூறலாம்.
இதுப் போன்று அனைத்து அரசு பள்ளிக்கூடங்களும் உண்மையில் முன்னாள் மாணவர்களால் பராமரிக்கப்பட்டால், உண்மையில் அரசு பள்ளிக்கூடங்கள் இன்னும் சிறப்பாக செயல்படும் என்பதில் ஐயமில்லை எனாலாம்.
மேலும் எத்தனை தனியார் பள்ளிகள் முளைத்தாலும் அரசு பள்ளிக்கூடத்தில் படித்தவர்களே நாட்டில் தலைசிறந்த குடிமகன்களாக திகழ்கின்றனர் எனவும் கூறலாம்.
மேலும் இந்நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர்கள் திருவெள்ளைவாயல் முத்து.வாயலூர் கோபி. காட்டுப்பள்ளி சேதுராமன் உள்ளிட்ட மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்துக்கொண்டனர்.




















