ஈரோடு:

ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள அக்கரை கொடிவேரி பகுதியில் அரசு நலத்திட்ட பணிகள் தொடக்க விழா நடந்தது.

இதில் தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு திட்டபணிகளை தொடங்கி வைத்து பேசினார்.

முன்னதாக அவர் நிருபர்களிடம் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

தமிழக அரசு சார்பில் தினமும் பல்வேறு திட்டப்பணிகள் நடந்து வருகிறது. இந்த பணிகள் யாவும் விரைவில் முடிக்கப்பட்டு மக்கள் பயன்பாட்டுக்கு விடப்பட்டு உள்ளது.
பொது மக்களின் அடிப்படை வசதிகள் யாவும் உடனுக்குடன் அரசு செயல்படுத்தி வருகிறது.

இந்தியாவிலேயே பள்ளி கல்வி துறையில் தமிழகம் முன்னோடி மாநிலமாக செயல்பட்டு வருகிறது. கல்வித்துறைக்கு பல கோடி ஒதுக்கப்பட்டு மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு செயல்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

அப்போது நிருபர்கள் “தமிழ்நாட்டில் 5 மற்றும் 8-ம் வகுப்புக்கு பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று கூறப்படுகிறதே?’ என்று கேட்டதற்கு அமைச்சர் செங்கோட்டையன் கூறும் போது, “மத்திய அரசு முடிவு செய்திருக்கலாம். ஆனால் தமிழக அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. எனினும் துறை ரீதியாக தயார் நிலையில் உள்ளோம். எனினும் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சரவை கூடி தான் அது பற்றி முடிவு எடுக்க உள்ளோம். மக்கள் யாரும் இது பற்றி அச்சப்பட தேவையில்லை” என்று கூறினார்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here