மாமல்லபுரம்:
கேளம்பாக்கத்தை அடுத்த ஏகாட்டூரை சேர்ந்தவர் தேவராஜ். இவரது மகன் தினேஷ் (வயது 16). மாமல்லபுரத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற மாசிமக தீர்த்தவாரிக்கு தேவராஜ் குடும்பத்துடன் வந்தார். பின்னர் அனைவரும் கடலில் குளித்தனர்.
அப்போது ராட்சத அலையில் சிக்கிய தினேஷ் கடலில் மூழ்கினார். நேற்று மதியம் கடற்கரை கோவில் அருகே தினேசின் உடல் பிணமாக கரை ஒதுங்கியது. இது குறித்து மாமல்லபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.