கடந்த ஜூலை 23 அன்று சென்னை சாந்தோம் பதிவுத்துறை தலைவர் அலுவலகத்தில் அமைச்சர் பி.மூர்த்தி தலைமையில் பதிவுத்துறை பணி சீராய்வு கூட்டம் நடைப்பெற்றது.அக்கூட்டத்தில் கடந்த ஜூன் 25-2021 அன்று வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர்  அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட கட்டுப்பாட்டு அறை மூலம் பொதுமக்களிடம் இருந்து பதிவு அலுவலர்கள் மற்றும் பதிவுப்பணி தொடர்பான புகார்களை 94984 52120, 94984 52130 என்ற அழைப்பேசி வழியாகவும் வாட்ஸ் ஆட் மூலமும் பெற்று தீர்வு காணும் பணியினை ஆய்வு செய்தார். இக்கூட்டத்தில் வணிகவரி மற்றும் பதிவுத்துறை அரசு செயலாளர் பா.நிர்மலாசாமி பதிவுத்துறை தலைவர் ம.ப.சிவன்அருள், கூடுதல் பதிவுத்துறை தலைவர்கள் , அனைத்து மண்டல துணை பதிவுத்துறை தலைவர்கள் மற்றும் துறை அலுவலர்கள் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here