சென்னை, செப். 28 –
மணலி ஆமுல்லை வாயில் பகுதியில் உள்ள புழல் ஏரியில் இருந்து வெளியேறும் உபரிநீர் கால்வாயில் தூர்வாரும் பணி நடைப்பெற்று வருகிறது. அதனை இன்று தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
வடகிழக்கு பருவமழை காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் நீர்நிலைகளை தூர் வாருதல் மற்றும் நீர் வழிப்பாதைகளில் உள்ள கழிவுப் படிவங்களை தூய்மைப்படுத்துதல் போன்ற பணியினை கடந்த செப் 20 முதல் தொடங்கி நடைப்பெற்று வருகிறது.
இதனைத் தொடர்ந்து சென்னை மாநகரில் மழைக்காலங்களில் எடுக்கப்படும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வட சென்னையில் 7 இடங்களில் இன்று ஆய்வுகளை மேற்கொண்டார். அதன் ஒரு பகுதியாக புழல் ஏரியில் இருந்து உபரி நீர் புழல் வடகரை வடபெரும்பாக்கம் ஆமுல்லைவாயில் வழியாக எண்ணூர் கடற்கரைக்கு செல்லும் கால்வாய் சேறும் சகதியும், ஆகாயத்தாமரை களும் நிறைந்து உள்ளது.
இந்நிலையில் கால்வாயை தூர்வாரி ஆகாயத்தாமரையை அகற்றி மழைநீர் மற்றும் உபரி தண்ணீர் சீராகச் செல்லும் விதமாக இதற்காக 17 லட்ச ரூபாய் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைப்பெற்று வருகிறது. அப்பணிக்காக ராட்சத இயந்திரங்கள் உதவியுடன் தூர் வாரி ஆகாயத்தாமரைகள் அகற்றப் படுவதை முதல்வர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந் நிகழ்ச்சியில் அமைச்சர் பி.கே. சேகர்பாபு, மாவட்ட செயலாளர் மாதவரம் எஸ்.சுதர்சனம் எம்எல்ஏ, திருவொற்றியூர் எம்.எல்.ஏ கே.பி.சங்கர், மாநகராட்சி ஆணையர் ககன் தீப் சிங் பேடி திருவொற்றியூர் பகுதி செயலாளர் தி.மு.க தனியரசு,புழல் நாராயணன், கேபி சொக்கலிங்கம், குறிஞ்சி கணேசன், நாகலிங்கம் உட்பட பலர் உடன் இருந்தனர்.