திருவாரூர், மே. 15 –

திருவாரூர் மாவட்டம் நன்னிலம் தாலுகா பூந்தோட்டம் அடுத்து இஞ்சிகுடி மகாராஜபுரம் ஊரில் சுமார் 70 ஆண்டுகளுக்கு மேல் அமைந்திருக்கும் சிவபெருமான் முனீஸ்வரராக எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்த முனீஸ்வரர் சுவாமி திருகோவிலில் பௌர்ணமியை முன்னிட்டு உலக மக்கள் நலன்வேண்டி சிறப்பு யாகம் நடைபெற்றது.

இதனைத் தொடர்ந்து 200க்கும் மேற்பட்ட பக்தர்கள் பால்குடம் சுமந்து கோவில் பிரகாரத்தை வலம் வந்து முனீஸ்வரர் மற்றும் அம்மனுக்கு அவரவர் கையால் அபிஷேகம் செய்து வழிபட்டனர்.

மேலும் பக்தர்கள் மஞ்சள் பேப்பரில் தங்களின் பிரச்சனையை கையால் எழுதி யாக குண்டத்தில்  போட்டு எரித்து விடுவதால் பிரச்சனைகள் அனைத்தும் தீரும் என இக்கோவிலின் ஐதீகம்.

இத் திருக்கோவிவிலில் தினந்தோறும் 250க்கும் மேற்பட்ட விளக்குகள் நல்லெண்ணெய் ஊற்றி விளக்கு ஏற்றி பக்தர்கள் வழிபட்டு வருகின்றனர்.  இவ்விழாவில் கலந்து கொண்ட அனைத்து பக்தர்கள் மற்றும் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினர். இவ்விழாவினை ஸ்ரீ முனீஸ்வரஸ்வாமி சேவா டிரஸ்ட்டின் சார்பாக ஏற்பாடுகள் செய்யப்பட்டது

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here