பொன்னேரி, ஜூலை. 22 –
பொன்னேரி ஜெயகோபால் கரோடியா மகளிர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் சுகாதாரம் நிலைக் குறித்து சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் திடீர் ஆய்வு. நடத்தினார்.
திருவள்ளூர் மாவட்டம் பொன்னேரி பகுதி வெண்பாக்கத்தில் அமைந்துள்ளது ஜெயகோபால் கரோடியா அரசினர் பெண்கள் மேல்நிலைப் பள்ளி .இப்பள்ளியில் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர்.
மேலும், இப்பள்ளியில் ஆறாம் வகுப்பு முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரை இப்பள்ளியில் உள்ளது. இந்நிலையில் இப்பள்ளியில் குடிநீர் வசதி, மாணவர்களுக்கு கழிப்பிட வசதி, சாலைகள் வசதி, கூடுதலான ஆய்வக அரங்குகள், உள்ளிட்ட கோரிக்கைகள் முன்வைத்து பிள்ளைகளின் பெற்றோர்கள் பொன்னேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகருக்கு புகார்கள் அனுப்பிய நிலையில் அப்புகாரின் அடிப்படையில் திடீரென இன்று அப்பள்ளிக்கு நேரில் சென்று ஆய்வு நடத்தினார்.
மேலும் பள்ளியினை முழுவதுமாக சுற்றிப் பார்த்தவர் தலைமை ஆசிரியரிடம் கோரிக்கைகளை பெற்றுக்கொண்டு, மாணவர்களின் சுகாதாரம் குறித்தும் கேட்டறிந்தவர் கழிப்பிடம் சுத்தம் செய்வதற்கு கூடுதலான நபர்களையும் பணியில் அமர்த்த ஆவணம் செய்தார். .பள்ளியின் உள் வளாகத்தில் சாலை அமைப்பதற்கும் .ஆய்வக புதிய கட்டிடம் அமைத்து தருவதற்கும் கோரிக்கைகளை கேட்டறிந்தார். மேலும் சுத்தமான குடிநீர் வழங்கப்படுகிறதா என ஆய்வு செய்தார், இந்நிகழ்வில் தலைமை ஆசிரியர் ஆனந்தலட்சுமி, திருவள்ளூர் மாவட்ட திமுக மாணவர் அணி செயலாளர் விக்னேஷ் உதயசூரியன். மற்றும் ஆசிரியர்கள் காங்கிரஸ் தொண்டர்கள் உடனிருந்தனர்.