காட்டூர், மார்ச். 03 –

திருவள்ளூர் மாவட்டம், காட்டூரில். மீஞ்சூரில் இயங்கி வரும் அசோக் லேலண்ட் லேர்னிங் லிங்க்ஸ் பவுண்டேசன் சார்பில் ரோட்  டு  ஸ்கூல் என்ற திட்டத்தின் படி, கல்வியின் முக்கியத்துவம் குறித்து, காட்டூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியில் இதற்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் கல்வியின் முக்கியத்துவம் குறித்தும், மேலும் எந்தக் குழந்தையும் கல்வி பயிலாமல் இருக்க கூடாது என்பதை வலியுறுத்தியும் மாணவர்களிடத்தில் விழிப்புணர்வு குறித்த கருத்தரங்கம் நடைப்பெற்றது

அதனைத் தொடர்ந்து, 180 க்கும் மேற்பட்ட மாணவ, மாணவியர்கள்  கல்வியின் முக்கியத்துவத்தை உணர்த்தும் வாசகங்கள் பொறித்த குறித்த விழிப்புணர்வு பதாகைகளை கைகளில் ஏந்தி கொண்டும், மேலும் உரத்தக்குரலில் முழக்கங்கள் எழுப்பியப்படியும், காட்டூர் ஊராட்சிப் பகுதிகளில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர்.

இந்நிகழ்விற்கு, காட்டூர் அரசினர் மேல்நிலைப் பள்ளியின் தலைமை ஆசிரியை செல்லம்மாள் முன்னிலை வகித்தார். மேலும், இப்பேரணியை காட்டூர் காவல்நிலைய ஆய்வாளர் பன்னீர்செல்வம் கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தார்.

மேலும் இப்பேரணியில் அசோக் லேலண்ட்- லேர்னிங் லிங்க்ஸ் பவுண்டேஷன் சமூக பணியாளர்கள் ஸ்டீபன் கிறிஸ்டோபர், சித்ரா, ராஜேஷ், வரதன், மஞ்சு, விஜய், வின்னி, விக்னேஷ், யோகேஷ், கௌதம், விக்னேஸ்வரன் உள்ளிட்டவரகளும் கல்வி ஆர்வலர்களும், இதில் திரளாக பங்கேற்றனர்.

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here