ஆர்.கே.பேட்டை, அக். 26 –
திருவள்ளூர் மாவட்டம் ஆர்கே பேட்டை அடுத்த வி புதூர் கிராமத்தில் சுமார் 30 வருடங்களுக்கு பிறகு ஸ்ரீபக்த ஆஞ்சநேய சுவாமி திருக்கோயில் மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதில் திருத்தணி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.சந்திரன் கலந்துக் கொண்டு சாமி தரிசனம் செய்தார். மேலும் இக் கும்பாபிஷேகத்தில் உள்ளூர் மற்றும் சுற்றுப்புற கிராம மக்கள் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துக்கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.