மீஞ்சூர், ஏப். 20 –

திருவள்ளூர் மாவட்டம், மீஞ்சூரில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி மீது அரசியல் பழிவாங்கும் நோக்குடன் பாஜகவினர் தொடர்ந்த பொய் வழக்கின் காரணமாக அவருக்கு சூரத் நீதிமன்றம்  இரண்டு ஆண்டு சிறை தண்டனை வழங்கியது அதனைத்தொடர்ந்து மோடி தலைமையிலான பாஜக அரசு ராகுல்காந்தியின் எம்.பி பதவியை பறித்தது. மேலும் அவருக்கு வழங்கப்பட்டுள்ள அரசு வீட்டை பறிமுதல் செய்ததை கண்டித்து நமிழ்நாடு முழுவதும் அக்கட்சினர் மத்திய அரசுக்கெதிரான பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

அதன் தொடர்ச்சியாக இன்று திருவள்ளூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியினர் சார்பில் மத்திய பாஜக அரசை கண்டித்து அக்கட்சியின் மாநில தலைவர் அழகிரி உத்தரவின் பேரில் மத்திய அரசு அலுவலகங்கள் மற்றும் வங்கிகளின் முன்பு ஆங்காங்கே கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்று வருகின்றது.

அதன் அடிப்படையில் பொன்னேரி தொகுதி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் துரை சந்திரசேகர் தலைமையில் மீஞ்சூர் பகுதியில் அமைந்துள்ள எஸ்பிஐ, மற்றும் இந்தியன் வங்கிகளின் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

மேலும் இவ்வார்ப்பாட்டத்திற்கு மீஞ்சூர் நகர தலைவர் துரைவேல் பாண்டியன், மாநிலத் துணைத் தலைவர் டி எல் சதாசிவலிங்கம், மாவட்டத் துணைத் தலைவர் சந்திரசேகர், மாவட்ட செயலாளர் பொன் மகேஷ், உள்ளிட்டவர்கள் முன்னிலை வகித்தனர்.

மேலும் இதில் ஐ.என்.டி.யு.சி. தாமோதரன், அத்திப்பட்டு புருஷோத்தமன், மீஞ்சூர் அன்பரசு, சிவகுமார், ஆரணி பேரூராட்சி துணைத் தலைவர் சுகுமாரன், மீஞ்சூர் அருண் குமார், உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட காங்கிரஸ் தொண்டர்கள் வங்கிகளின் முன்பு மத்திய அரசுக்கு எதிரான கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர்.

 

ஒரு பதிலை விடவும்

Please enter your comment!
Please enter your name here